
உலகம் முழுவதும் நடைபெறும் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் இந்திய அரசு நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவும் முக்கிய இடத்தை பெற்று இருக்கிறது. இதனால் உலகம் முழுவதுமே இந்திய அரசு நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவை உற்று நோக்குகின்றன. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
நடபாண்டிற்கான நிகழ்ச்சி நவம்பர் 20 இன்று தொடங்கி நவம்பர் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. இதில் மாதுரி தீக்ஷித், சாஹித் கபூர், ஸ்ரேயா சரண், ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். மற்ற பல நிகழ்வுகளில் சல்மான் கான், ஏ.ஆர் ரகுமான், ஆயுஸ்மான் குரானா, விக்கி கவுசல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் 4 இடங்களில் 9 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 270 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 89 திரைப்படங்களும், ஆசிய பிரார்த்தியத்தை சேர்ந்த 62 திரைப்படங்களும், 10 சர்வதேச திரைப்படங்களும், 13 உலக திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.
மேலும் இந்த ஆண்டு முதல் சிறந்த வெப் சீரிஸ்-க்கு என்று தனிப்பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் நடபாண்டில் 15 ஓடிடி தளங்களில் இருந்து 10 மொழிகளில் வெளியான 32 வெப் சீரிஸ் தேர்வாகி இருக்கின்றன.
தங்க மயில் விருதிற்காக 15 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. அதில் 3 இந்திய குறும்படங்கள் ஆகும். மேலும் பனோரமா பிரிவில் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் தேர்வாகியுள்ளது.
மேலும் காதல் என்பது பொதுவுடமை, நீல நிற சூரியன் ஆகிய திரைப்படங்களும் ஆவணப்படம் மற்றும் குறும்பட பிரிவுகளில் தேர்வாகி இருக்கின்றன. மெயின் ஸ்க்ரீன் பிரிவில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.