ரஜினிகாந்த் படத்தில் நடிகர் யாஷ் நடிக்கிறாரா? லோகேஷ் கனகராஜ் புது திட்டமா?

ரஜினிகாந்த் படத்தில் நடிகர் யாஷ் நடிக்கிறாரா? லோகேஷ் கனகராஜ் புது திட்டமா?

லோகேஷ் கனகராஜ் தனக்கென தனித்துவமான யோசனைகளைக் கையாண்டு, ஒரு சிறந்த படைப்பை அழகாக கொடுக்கக்கூடிய ஒரு பிரம்மாண்ட இயக்குநர். தமிழ் சினிமாவில் அவரது படங்கள் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்படுவதோடு, வணிக ரீதியாகவும் நல்ல வசூலை குவித்துவரும் படமாகவும் அமைந்து வருகிறது.

அவரது இயக்கத்தில், பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கார்த்தியின் 'கைதி' மற்றும் கமல்ஹாசனின் 'விக்ரம்' படங்களின் மூலம் தென்னிந்திய திரையுலகில் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கினார்.

தற்போது லோகேஷ், நடிகர் விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தை இயக்கவிருக்கிறார். இது ரஜினிகாந்த் நடிக்கும் கடைசி படமாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

'லியோ'வைப் போலவே தலைவரின் இப்படமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, இப்​​​​படத்தில் ஒரு பிளாக் பஸ்டர் கதாநாயகனும் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 'தலைவர் 171' படத்தில் பிரபல கன்னட நடிகர் 'கேஜிஎஃப்' புகழ் யாஷை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். லோகேஷ் அக்டோபர் வரை 'லியோ' படத்தில் பிஸியாக இருப்பார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com