Arjun dass iswarya lakshmi
Arjun dass iswarya lakshmi

கைதி அர்ஜுன் தாஸை காதலிக்கிறாரா ஐஸ்வர்யா லட்சுமி?

Published on

விஷாலின் ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. அதன் பின்னர் தனுஷ் உடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து இருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரங்களில் பட்டையை கிளப்பி இருந்தார் அதில் வந்த படகு காட்சியால் ஏகப்பட்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி கிடைத்தனர். அதன் பின் விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தியில் நடித்து பிரபலம் ஆகி விட்டார்.

தற்போது ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிகர் அர்ஜுன் தாஸ் தோளில் சாய்ந்துக் கொண்டு படுரொமாண்டிக்காக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு கூடவே ஹார்ட் சிம்பிளையும் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை வாழ்த்து தெரிவித்தனர்.

யார் இந்த அர்ஜுன் தாஸ் தெரியுமா?

சென்னை பையன் அர்ஜுன் தாஸுக்கு 32 வயதாகிறது. 2012ல் வெளியான பெருமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த அர்ஜுன் தாஸ். வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரரான இவர் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் கைதி படத்தில் வில்லனாக நடித்து கலக்கினார். அந்த படத்தில் இவர் பேசிய பிரபலமான லைஃப் டைம்செட்டில்மென்ட் டா வசனத்தையே அவருக்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டு வாழ்த்தினர்.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இதற்க்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் நங்கள் காதலிக்கவில்லை நண்பர்கள் தான் என் கூறியுள்ளார் .

logo
Kalki Online
kalkionline.com