அஜித்தின் இந்த படத்திற்கு இவர்தான் ஜோடியா!?

அஜித்தின் இந்த படத்திற்கு இவர்தான் ஜோடியா!?
Published on

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அஜித்தின் 'துணிவு' திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் அடுத்த படமான 'AK62'-வை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் முதல் படம் இது. இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் 17ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை, இப்படத்தின் கதாநாயகி யார் என்று முடிவு செய்யப்படவில்லையென்றாலும், த்ரிஷாவின் பெயர் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால் அதுவும் கிசுகிசுக்கப்பட்டதே தவிர உண்மையாக கூறப்படவில்லை.

இந்நிலையில், இதற்கு முன்னதாக, 'விவேகம்' படத்தில் அஜித் ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் 'AK62'வில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையும் தற்போது நடந்து வருகிறதாம்.

ஒருவேளை 'ஏகே62'வில் அவர் நடிக்கவில்லை என்றால், அந்த வாய்ப்பு அடுத்ததாக, திரிஷா அல்லது நயன்தாராவுக்கு போகவுள்ளதாகவும் அறியப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com