எந்தா சாரே மனசலாயோ.. ஜெயிலர் விநாயகன் கைது!
static.toiimg.com

எந்தா சாரே மனசலாயோ.. ஜெயிலர் விநாயகன் கைது!

Published on

ஜெயிலர் படத்தில் நடித்த மலையாள நடிகர் விநாயகனை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ஜெயிலர் படம் திரையில் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டது. நடிகர் ரஜினியின் அசத்தலான ஸ்டைல் மூலம் ரசிகர்கள் கவர்ந்திழுக்கப்பட்டனர். தொடர்ந்து இந்த படத்தில் பெரும்பாலானோர் பேசப்பட்டது வில்லனாக நடித்த விநாயகன் நடிப்பை பற்றி தான். அப்படி தனது  அசாத்திய திறமையால் ரசிகர்களை கவர்ந்திழுத்த விநாயகன் தற்போது கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கேரள சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் விநாயகன். தற்போது விநாயகன் வீட்டில் இருந்து சத்தம் அதிகமாக வருவதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த நடிகர் எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில் நுழைந்து ரகளை செய்துள்ளார்.

அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருக்கின்றனர்.

அவரது கைது மலையாள சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com