வெளியானது காவாலா பாடல் வீடியோ.. வைப் செய்யும் இளைஞர்கள்!
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ஜெயிலர் படம் திரையில் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டது. நடிகர் ரஜினியின் அசத்தலான ஸ்டைல் மூலம் ரசிகர்கள் கவர்ந்திழுக்கப்பட்டனர். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். பான் இந்திய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த படம் ஹிட்டானது.
நெல்சனின் கடந்த படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், அவர் மீது விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்தனர், இந்த நிலையில் ஜெயிலர் படம் ஹிட்டடித்தன் மூலம் நெல்சன் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். படத்தில் மேலும் ஒரு மெருகு போல இசையில் பட்டைய கிளப்பியுள்ளார் அனிருத்.
இந்த நிலையில் இந்த படத்தின் காவாலா பாடல் வேர்ல்டு லெவல் ட்ரெண்டாகியுள்ளது. தமன்னாவின் அசத்தலான ஸ்டெப்ஸ் பல ரசிகர்களை கவர்ந்து தற்போது அனைவரும் இன்ஸ்டாகிராமில் காவாலா பாடலுக்கு குத்தாட்டாம் போட்டு வருகின்றனர். இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை யூடியூபில் 178 மில்லியன் பார்வையாளர்களை லிரிக் வீடியோ கடந்துள்ள நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த காவாலா வீடியோ பாடல் சப்ரைஸாக தற்போது வெளிவந்துள்ளது.
தமன்னாவின் அசத்தலான டான்ஸை பார்ப்பதற்கே பலரும் இந்த பாடலின் வீடியோப்வை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு ஏற்றவாறு பாடலின் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காலை முதலே காவாலா வீடியோவை பார்த்து இளைஞர்கள் பலரும் வைப் செய்து வருகின்றனர்.