சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றுள்ளது. படம் வெளியான ஏழு நாட்களுக்குள் 375 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில்,பட்ஜெட் அளவில் ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், படக்குழுவினர் சார்பில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுது. நிகழ்ச்சியில், படத்தின் இயக்குநர் நெல்சன், நடிகர்கள் வசந்த் ரவி, சுனில், கிங்ஸ்லி, ஜாபர் மற்றும் மிர்னா (படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர்) கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய நடிகை மிர்னா தமிழ், மலையாளலத்தில் சில படங்கள் நடிச்சிருக்கேன். ஜெயிலர் படத்தில் நடித்த பின்னாடி என்னை இந்தியா முழுவதும் தெரியுது. இதற்கு காரணம் ரஜினி சார்தான். ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு முக்கியமான திருப்புமுனை வரும். இந்த படம் எனக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கு என்றார்.
"ப்ளாஸ்ட் மோகனா நான் நடிச்சதை பார்த்து பல பேர் சிரிக்கிறாங்க. ஆனால் ரஜினி சாரோட நிறைய சீன்ல சேர்ந்து நடிக்க முடியலைன்ற வருத்தம் இருக்கு. இந்த வருத்தம் அடு த்த படங்களில் மகிழ்ச்சியா மாறும். ரஜினி சாரின் அடுத்த படங்களில் நான் நடிப்பேன்னு நம்புறேன்" என்றார் 'ப்ளாஸ்ட் மோகன்' சுனில்
இயக்குநர் நெல்சன் பேசும் போது "படம் ரிலீஸ்க்கு மூன்று நாள் முன்னாடி ரஜினி சாருக்கு மட்டும் தனியாக ஜெயிலர் படத்தை போட்டு காட்டினேன். படம் முடிந்த பின்பு சாரிடம் உங்களிடம் ஜெயிலர் படத்தின் கதையை உங்களுக்கு சொன்ன போது இருந்த மன நிலையும், இப்போது படம் பார்த்த பிறகு இருக்கும் மனநிலைக்கும் உள்ள வேறுபாடு எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அப்போது பத்து மடங்கு திருப்தி இருந்தது இப்போது நூறு மடங்கு திருப்தி இருக்கிறது என்றார். அப்போதே படம் மிகப்பெரிய வெற்றி என புரிந்து விட்டது ரஜினி சாரின் கண்களை நன்றாக படம் பிடித்ததாக சொல்கிறார்கள். சாரின் கண்கள் மீது மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. ரஜினி சாரின் உடல் மொழியை கண்கள் மூலம் சொல்லக்கூடிய அற்புதமான நடிகர். ரஜினி சார் இந்த வெற்றியை நாங்க கொண்டாடிகிட்டு இருக்கோம். இந்த வெற்றிக்கு காரணமே நீங்கதான். நீங்க இமயமலையில் இருப்பதாக சொல்றாங்க. சீக்கிரம் வங்க சார். இந்த வெற்றியை உங்களோடு சேர்ந்து கொண்டாட ஆசையாய் இருக்கோம்."என்கிறார்