ஜனநாயகன் இசை வெளியிட்டு விழா தொடக்கம் :ரசிகர்கள் தவெக! தவெக! என்று கோஷம்..!

Jananayagan Audio launch
Jananayagan Audio launchsource:twitter
Published on

ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜயின் 69 வது மற்றும் இறுதித் திரைப்படமாக உள்ள இந்தத் திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார் . தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஜயின் கடைசித் திரைப்படம் என்று ஜனநாயகன் அறிவிக்கப்பட்டுள்ளதால் , இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது .இசை வெளியீட்டு விழா நடைபெறும் புக்கிட் ஜலீல் மைதானத்தை சுற்றி 5 கி.மீ. வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மட்டுமல்லாமல் , விஜய்யின் 30 ஆண்டு கால சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் "தளபதி திருவிழா" என்ற பெயரில் இசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளைக் காண ₹2000 முதல் ₹7000 வரை டிக்கெட்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்றுத் தீர்ந்துள்ளன. விஜய் தோன்றும் இறுதியான சினிமா நிகழ்ச்சி இது என்பதால் , இந்த நிகழ்வைக் காண சுமார் 1 லட்சம் பேர் வரை ரசிகர்கள் கூடியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவிலான வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது. ஆடியோ லாஞ்ச் சம்மந்தமாக எந்த ஒரு வீடியோ எடுக்கவும் பதிவேற்றவும் விழாக் குழுவினர் தடை விதித்துள்ளனர். தளபதி திருவிழாவில் விஜயின் கடந்த கால புகழ்பெற்ற பாடல்கள் இடம்பெற்றன. விஜயின் பாடல்களை விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், ஹரிசரண், க்ரிஷ், எஸ்பி சரண், திப்பு, ஸ்வேதா மோகன், யோகி பி, ஆண்ட்ரியா மற்றும் சஞ்சனா திவாக்கர் கல்மஞ்சே உள்ளிட்ட பாடகர்கள் பாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ போன்ற இயக்குநர்கள் கலந்துக் கொள்கின்றனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, மம்தா பைஜூ ஆகியோர் முன்னதாகவே மலேஷியா வந்திருந்தனர். தனுஷ் , சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் இந்த விழாவில் கலந்துக் கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அவர்கள் பற்றி தகவல் ஏதும் இல்லை.

போக்குவரத்து நெரிசல் மற்றும் மழையின் காரணமாக இசை வெளியீட்டு தொடங்கும் நேரம் தாமதமானது. முன்னதாக இசை வெளியீட்டு விழாவிற்கு , மலேஷியா அரசாங்கம் பல கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்துள்ளது, இதில் முக்கியமான ஒன்றாக , இந்த விழாவில் விஜய் எந்த ஒரு அரசியலும் பேசக் கூடாது என்பது தான் , மேலும் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளும் அங்கு இருக்கக் கூடாது என்று நிபந்தனையுடன் தான் விழாவிற்கு அனுமதிக் கொடுத்திருந்தனர்.

மலேஷியா வந்த விஜய்க்கு ரசிகர்கள் மிகவும் சிறப்பான வரவேற்பை அளித்து வரவேற்றனர். நீல நிறக் கோட் அணிந்து வந்த விஜய் விழா அரங்கிற்குள் நுழைந்ததும் ரசிகர்கள் "டிவிகே டிவிகே" என்று உற்சாகமாகக் குரல் எழுப்பி வருகின்றனர். மலேஷியா அரசின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் விஜய் எவ்வாறு பேசுவார் ? அவரது பேச்சில் என்ன இருக்கும்? அரசியல் கலக்காமல் சினிமாவைப் பற்றி மட்டுமே பேசுவாரா? வழக்கமான இந்தியர்களின் பாணியில் மறைமுகமாக அரசியல் எதுவும் பேசுவாரா? என்று விஜயின் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளை விரைவில் நீங்கள் ஜீ தமிழில் மற்றும் ZEE தமிழ் சேனலில் மற்றும் ZEE5 இல் கண்டுகளிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
2025 REWIND: அதிகம் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை தழுவிய Top ஹீரோக்களின் 10 படங்கள்!
Jananayagan Audio launch

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com