சிம்பு 48-ல் ஜான்வி கபூர்? கோலிவுட்டில் எண்ட்ரி ஆகும் பாலிவுட் நடிகைகள்!

Simbu 48
Simbu 48

சிம்பு நடிக்க இருக்கும் 48வது படம் குறித்த தகவல்கள் கடந்த ஒரு ஆண்டாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டு முன்னணி பாலிவுட் நடிகைகள் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் "தக் லைப்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் "தக் லைஃப்" திரைப்படத்திற்கு முன்பாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது பட பணிகளை மேற்கொண்டு வந்தார் சிம்பு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. STR 48 படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார், அதுவும் ஹீரோ மற்றும் வில்லன் என்று இரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ள நிலையில் அதற்காக பல சண்டை பயிற்சிகளையும் அவர் வெளிநாட்டில் மேற்கொண்டார்.

அப்பட பணிகள் இப்பொது பாதியில் நிற்கும் நிலையில், விரைவில் Thug Life பட பணிகளை முடித்துவிட்டு தனது 48வது பட பணிகளை மீண்டும் சிம்பு துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மாஸ் காட்டும் 'கருடன்' பட ட்ரைலர்... எப்படி இருக்கு தெரியுமா?
Simbu 48

இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு பாலிவுட் முன்னணி நடிகைகளான கைரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கைரா அத்வானி ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் கேம் சேஞ்சர் என்ற தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ஜான்வி கபூர் முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் ஆகிய இருவரும் பாலிவுட்டில் முன்னணி நடிகைகள் என்ற நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக அவர்களுக்கு பெரும் தொகை சம்பளம் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் இந்த படத்தின் பட்ஜெட் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக 100 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த இரண்டு பாலிவுட் பிரபலங்களால் இன்னும் பட்ஜெட் அதிகமாகும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் பிசினஸ் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com