இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘ஜப்பான்’.
பொன்னியின் செல்வன், சர்தார் படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குனர் ராஜூ முருகன் இயக்கும் ஜப்பான் திரைப் படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பும், அன்பறிவு ஆக்ஷன் கோரியோகிராஃபியும் செய்துள்ளார்.
இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் தமிழில் அறிமுகமாகிறார், இதில் திரைப்பட தயாரிப்பாளர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கார்த்தி பிறந்த நாளான நேற்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஜப்பான் பட டீசரை படக் குழு வெளியிட்டது. இதனை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 'ஜப்பான்' மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஜப்பான் டீசர் வெளியான ஒரே நாளில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக் குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாக்கும் அந்த திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்துள்ளன. கார்த்தியின் 25வது படமாக உருவாகும் இப்படம் தீபாவளியன்று திரை யரங்குகளில் வெளியாக உள்ளது.