ஜவான் திரைவிமர்சனம்!

ஜவான் திரைவிமர்சனம்!
Published on

ல்வேறு கொண்டாடங்கள், எதிர் பார்ப்புகள் மத்தியில் வெளியாகி உள்ளது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம். 

மக்களை பணயமாக  வைத்து அரசிடம் பணம் பெற்று ஏழை மக்களுக்கு தருகிறான் ஒருவன்.தொடர்ந்து இதே போல நடக்க, ஒரு கட்டத்தில் இதை செய்வது  யார் என்ற தேடலில்  ஜெயிலர் ஆசாத் என்று கண்டுப்பிடிக்கிறது காவல்துறை. பின்பு இந்த ஆசாத்தும் இதற்கு காரணம் இல்லை. விக்ரம் ரத்தோர் என்பவர்தான் காரணம் என்று கண்டு பிடிக்கிறார்கள். 

விக்ரம் ரதோர் யார்? இவருக்கும் இந்த விஷயங்களுக்கும் என்ன தொடர்பு என்று படம் விவரிக்கிறது.                              அட்லீ பொதுவாக வெற்றி பெற்ற  பழைய படங்களை அப்படியே ரீ மேக் செய்து தருவார். ஜவானில் தமிழில் வெற்றி பெற்ற பல படங்களை சேர்த்து தந்துள்ளார்.பணத்தை கடத்தும் போது ஜெண்டில் மேன், மருத்துவமனை ஊழலை சொல்லும் ரமணா, விவசாயம் பற்றி பேசும் கத்தி, ராணுவ ஊழல்களை சொன்ன ஆரம்பம், காணாமல் போன அப்பா திரும்பி வரும்போது சென்ற ஆண்டு வெளி வந்த சர்தார்,  சமீப காலத்தில் வெளியான சுற்றுசூழல் மாசுபாட்டை சொன்ன சில படங்கள், நினைவுகள் மாறக்கப்படும் போது  ஜாக்கிஜான் நடித்த who am I? என்ற ஆங்கில படம் என  பல படங்களின் கதம்பமாலையாக ஜவான் படத்தை தந்துள்ளார் அட்லீ.

காட்சிகளை நகர்த்தும் விதத்திலும் பெரிய மாற்றம் இல்லை.  இப்படி பழமை மாறாமல் தந்துள்ள இந்த படத்தை தூக்கி நிறுத்துவது ஷாருக்கானின் நடிப்புதான்.முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை நடிப் பில்  ஆளுமை செய்கிறார் ஷாருக்.ரொமான்ஸ், ஆக்ஷன், குரலில் ஏற்ற இறக்கம் என தனக்கே உரிய பாணியில் நடிப்பில் அசத்தி இருக்கிறார். தீபிகா படுகோன் சில காட்சிகள்  வந்தாலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். விஜய் சேதுபதி மிரட்டலாக இல்லாமல் கொஞ்சம் காமெடி செய்து வில்லனாக சிரிக்க வைக்கிறார். அம்மாவாக நடிக்கும் போது ஒரு சாதாரண தாயாகவும், ஆக்ஷன் காட்சிகள் அதிரடியாகவும் நடித்துள்ளார்  நயன்தாரா.        

ரூபனின் படத்தொகுப்பை கண்டிப்பாக பாராட்டலாம். ஜவான் படத்தில் பல படங்களின் சாயல் இருந்தாலும், படம் பார்க்கும் போது இதை ஓரளவு மறக்க செய்வது இவரின் எடிட்டிங்தான்.சிறைசாலை கட்டிடத்தை ஆர்ட் டைரக்டஷன் குழு நன்றாக உருவாக்கி உள்ளது.அனிருத் இசை ஆட்டம் போட வைக்கிறது பாலிவுட்டிற்கு சென்று ஷாருக்கானை வைத்து ஒரு தமிழ் படத்தை அட்லீ இயக்கியது போல உள்ளது ஜவான்.ஷாருக்கானின் நடிப்பிற்க்காக இந்த ஜவானை பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com