ஜெயம் ரவியின் அகிலன் 20 நாட்களில் OTT ரிலீஸ்!

ஜெயம் ரவியின் அகிலன் 20 நாட்களில் OTT  ரிலீஸ்!

ஜெயம் ரவி , என். கல்யாண கிருஷ்ணன் அவர்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அகிலன். பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் அகிலன் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைத்திருக்கிறார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அகிலன் திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஜெயம் ரவியின் பூலோகம் படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன். அவர் அகிலன் திரைப்படத்தில் இரண்டாவது முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்தப் படம் நெய்தல் நிலம் சார்ந்த கதை எனத் தெரிகிறது. இதில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் ஆன்டி-ஹீரோ போல உள்ளது. பிரியா பவானி சங்கர், காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி தான் திரையரங்குகளில் வெளியான நிலையில் அதற்குள் 20 நாட்களில் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் வெளி வந்துள்ளது என்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயம் ரவியின் அகிலன் படத்தின் ஓடிடியில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீ 5 ஓடிடி தளம் மார்ச் 31 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறது.

ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய ஒரு மாதம் கழித்தே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்கள் நிபந்தனை விதித்துள்ள நிலையில் 21 நாட்களில் ‘அகிலன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத ‘அகிலன்’ ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறுமா? பார்க்கலாம் !

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com