mysskin with vijay sethupathi
mysskin with vijay sethupathi

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெயராம்!

Published on

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஜெயராம் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்த பிசாசு 2 திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

இயக்குனர் மிஷ்கின் ஒருபுறம் நடிப்பு என்று முன்னணி நடிகர்களோடு இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன், தற்போது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்துள்ளார். மற்றொருபுறம் படத்தை இயக்கும் பணியிலும் ஆர்வத்தோடு செயல்பட்டு வருகிறார்.

jeyaram with vijay sethupathi
jeyaram with vijay sethupathi

இந்த நிலையில் தான் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்குனர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் வில்லனாக ஜெயராம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயராம் மலையாள திரை உலகில் கவனம் செலுத்தி வந்த நேரத்தில் சமீப காலமாக தமிழ் திரைப்படத்திலும் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே ஜெயராம், விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் இந்த படத்தை மிஷ்கின் இயக்க இருப்பதால் வில்லன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும் இந்த படம் ஆக்சன் திரில்லர் படமாக உருவாக உள்ளது என கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com