ஜெகன் மோகன் ஸ்டைலில் மிரட்டிய ஜீவா.. யாத்ரா 2 படம் எப்படி இருக்கு?

யாத்ரா 2 படம்
யாத்ரா 2 படம்

ஆந்திரா அரசியலில் மாபெரும் ஆளுமையாக விளங்கியவர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி. ஆந்திராவின் பட்டி தொட்டி எங்கும் ஒய்எஸ்ஆருக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. இந்த மரியாதையே ஓ எஸ் ஆர் மரணத்திற்கு பிறகு அவரின் மகனான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் ஆந்திராவில் தற்போது தந்தையை மிஞ்சிய மகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. ஜெகன்மோகன் ரெட்டியினுடைய செயல்பாடு ஆந்திராவில் அவருக்கான தனி இடத்தை தற்போது உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் மஹிவி ராகவ் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்றை தழுவி யாத்ரா 2 பாகத்தை எடுத்தனர். இந்த படத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தோற்றத்தில் நடிகர் ஜீவா நடித்து அசத்தியுள்ளார்.

இந்த படம் இன்று வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

யாத்ரா 2 எப்படி இருக்கு?

2019 ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியான யாத்ரா , ஒய்எஸ் ஜெகனின் வெற்றி எழுச்சிக்கு வழிவகுக்கும் நிகழ்வுகளை விவரிக்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அதன் புகழ்ச்சித் தொனியும் படம் வெளியாகும் நேரமும் அதன் நோக்கங்களைத் தெளிவாக்குகிறது. ஒய்.எஸ்.ஆரும் ஜெகனும் தவறே செய்யாத தலைவர்களாக சித்தரிக்கப்பட்டாலும், எதிரிகள் அனைவரும் தந்திரமாகவும், கோணலாகவும் உள்ளனர். அந்த கட்டமைப்பிற்குள், இது ஒரு தந்தை மற்றும் மகனின் அழுத்தமான கதையாக இருக்க முயற்சிக்கிறது. இந்த படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com