ஜெயமோகனின் 'ரத்த சாட்சி'!

ரத்த சாட்சி
ரத்த சாட்சி
Published on

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் கதையை படமாக்குவது மிகவும் அரிதான விஷயம். கேரளாவை போல தமிழ் சினிமாவில் இது போன்ற சூழல் இல்லை.

ஒ டி டி யில் படங்கள் வெளியான பின்பு இந்த நிலைமை மாறி வருகிறது. 1980 களில் தென்னிந்தியாவில் பரவலாக நக்சல்பாரி அமைப்புகள் செயல்பட்டு வந்தன. இந்த இயக்கங்கள் விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தன.

இந்த அமைப்புகளை அரசுகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கின. இந்த நக்சல் அமைப்புகளை கருவாக வைத்து கைதிகள் என்ற சிறு கதையை ஜெய மோகன் எழுதியுள்ளார்.

இந்த கைதிகள் கதையை தழுவி, ரத்த சாட்சி என்ற படத்தை இயக்குனர் ரஃபீ க் இஸ்மாயில் இயக்கி உள்ளார். மகிழ் மன்றம் தயாரித்துள்ள இந்த படத்தை ஆஹா தமிழ் ஒரிஜினல் வெளியிடுகிறது.

கண்ணா ரவி
கண்ணா ரவி

இந்த படத்தின் வெளியிட்டு நிகழ்வில் பேசிய டைரக்டர் ரஃபீ க் "நான் அறிமுக இயக்குனர். நான் எப்படி படம் எடுப்பேன் என்று கூட ஜெயமோகன் அய்யாவுக்கு தெரியாது. இருந்தாலும் என்னை நம்பி இந்த கதையை என்னிடம் தந்தார். இந்த ஒரிஜினல் கதையில் முருகேசன் கதாபாத்திரம் முதன்மையாக இருக்கும். இதை சினிமாவாக மாற்றும்போது அப்பு கதாபாத்திரம் முதன்மையாக வந்து விட்டது. இன்று இருக்கும் கைபேசி, கம்ப்யூட்டர், வீடு அமைப்புகள் எதுவும் 80களில் இல்லை. கவனத்துடன் நேர்த்தியாக இந்த 1980களை உருவாக்கி உள்ளோம்"என்றார். கண்ணா ரவி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

குமாரவேல், ஆறு பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டான்ஸ் மாஸ்டர் கல்யாண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டைட்டிலில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சின்னமான அரிவாள் - சுத்தியல் இருப்பது குறிப்பிடத்தக்கது. படம் சொல்லும் காலங்களில் உள்ள அரசியலும், அரசியல் தலைவர்களும் படத்தில் காட்டப் படுகிறார்கள் என்கிறார் டைரக்டர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com