கர்ணன் கதாபாத்திரத்தில் சூர்யா.., ஜோடியாகும் பிரபல ஹீரோயின்!

Actor Suriya
Actor Suriya

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கங்குவா படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி வைரலாகி வரும்வேலையில், தற்போது சூர்யா கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகயுள்ளது.

கங்குவா திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43 வது படத்தில் சூர்யா நடிக்கிறார். இதன் டைட்டிலின் கீழ் புறநானுhறு என்று எழுதப்பட்ட போஸ்டரை வெளியிட்டனர். மதுரையில் 1950 - 1965 க்கு இடைப்பட்ட காலத்தில் நடக்கும் கதை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், விஜய் வர்மா நடிக்க, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

சூர்யா- சுதா கொங்கரா
சூர்யா- சுதா கொங்கரா

சுதா கொங்கரா படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்தியில் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் மகாபாரத கர்ணன் குறித்த கதையில் சூர்யா நடிக்கிறார். கர்ணனைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்த புராணப் படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கயிருப்பதாக மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

இந்த படம் பட்ஜெட் சுமார் 500 கோடியில் தயாரிக்கப்படவுள்ளது என கூறப்படுகிறது. படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com