Jigar Thanda DoubleX
Jigar Thanda DoubleX

ஜிகர்தண்டா டபுள் X விமர்சனம்!

ஜிகர்தண்டா டபுள் X : மாறுபட்ட சுவை (3 / 5)

ன்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஜிகர்தண்டாவில் சொன்ன ரவுடியை வைத்து  படம் எடுக்கும் மதுரை பின்புல கதைதான்  ஜிகர்தண்டா டபுள் X. காட்பாதர்,1970களில் வந்த சில ஹாலிவுட் கௌபாய் திரைப்படங்கள் காடு, மலை என்ற சில பிளேவர் சேர்த்து ஜிகர்தண்டா டபுள் X படத்தை தந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

படத்தின் கதையை பொருத்தவரையில், போலீஸ் வேலைக்கு சேர ஆசைப்படும்  ரேசர் (S. J. சூர்யா ) சந்தர்ப்ப வசத்தால் ஒரு கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு சிறை செல்கிறான்.மதுரையில் இருக்கும் ஆயிஸ் சீசர்  (ராகவா லாரான்ஸ்) என்ற ரவுடியை கொன்றால் ரேசருக்கு விடுதலை வாங்கி தந்து போலீஸ் வேலை வாங்கி தருவதாக சொல்கிறார் காவல் உயர் அதிகாரி. மதுரை சென்று ரவுடியிடம்  உன்னை ஹீரோவாக வைத்து சினிமா படம் எடுப்பதாக சொல்லி கொலை செய்ய முயற்சிக்கிறார் ரேசர். ரேசரின்  கனவு பலித்ததா என்பது மீதிக்கதை. 

இது ஒரு ரவுடி -போலீஸ் கதைதான். ஆனால் சொன்ன விதத்தில் வித்தியாசம் காட்டியுள்ளார் கார்த்தி. முதல் பாதி மதுரையை சுற்றி நடக்கும் கதை, இரண்டாவது பாதி தேனி மலைபகுதியில் நடக்கிறது. இரண்டாவது பாதிதான் படத்தில் உயிரோட்டமாக இருக்கிறது. ஏழுகடல் தெரு, நாராயாணா காபி என 1970 களின்  பழைய மதுரை தெருக்களை தத்ரூபமாக திரையில் சொல்லி இருக்கிறார் கலை இயக்குநர்.பாடல்களிலும், பின்னணி இசையிலும் மலைவாழ்பழங்குடி  மக்களின் இசையை சரியாக பயன் படுத்தி உள்ளார் சந்தோஷ் நாராயணன்.   

ஜிகர்தண்டா டபுள் X ராகவா லாரன்ஸ்க்கு பேய் படத்தில்லிருந்து விடுதலை தந்துள்ளது. இதுவரை லாரன்ஸ் நடித்த படங்களில் இது  மாறுபட்ட  கேரக்டர்  என்று உறுதியாக சொல்லாம். ஒரு காட்டு வாசியாக, ரவுடியாக வாழ்ந்து காட்டியுள்ளார். S. J. சூரியா அதிகம் கத்தாமல் அளவாக நடித்துள்ளார். திருநாவுகரசின் ஒளிப்பதிவில் 1970 களின் மதுரை நகர வீதிகளின் வெளிச்சம் சிறப்பாக பதிவு செய்யபட்டுள்ளது.

சினிமாவின் தாக்கத்தை நல்ல விஷயங்களுக்கு பயன் படுத்தலாம் என்னும் விஷயத்தை இன்னமும் ஆழமாக சொல்லி இருக்கலாம் டைரக்டர். படத்தில் சில குறைகள் இருந்தாலும் மாறுபட்ட கிளைமேக்ஸ்ஸில் நம்மை கவனம் பெற வைக்கிறது ஜிகர்தண்டா டபுள் X.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com