அடுத்தடுத்து பெருமை சேர்க்கும் ஜிகர்தண்டா.. மகிழ்ச்சியில் படக்குழு!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

யக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மீண்டும் ஒரு பலத்த போட்டிக்கு தயாராகியுள்ளதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

இன்று தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குனர்களாக இல்லாமல் பலர் படம் தந்து வெற்றி பெறுகிறார்கள். இப்படி உதவி இயக்குனர்களாக இல்லாமல் இயக்குனராக முடியும் என சமகாலத்தில் நிரூபித்து காட்டியவர் கார்த்திக் சுப்புராஜ்.

இவர் இயக்கத்தில் வெளியான படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஏற்கனவே முதல் பாகம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற நிலையில், இந்த பாகமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா என மாஸ் நடிகர்கள் அனைவரும் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அப்படிப்பட்ட இந்த திரைப்படம் பெருமை வாய்ந்த ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFR) டச்சு பிரீமியர் பிரிவில் திரையிடப்படுவதற்காக‌ தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், லைம்லைட் பிரிவின் கீழ் திரையிடப்படுவ‌தை அதிகார பூர்வமாக IFFR குழு தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து சந்தோஷ செய்திகளை கேட்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் அடிநாதமே 'நீங்கள் கலையை தேர்வு செய்யவில்லை.

கலை உங்களை தேர்வு செய்கிறது' என்பது தான். ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டச்சு பிரீமியருக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் லைம்லைட் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிப்பதாக பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com