'டக்கு முக்கு டிக்கு தாளம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொன்டு பேசினர். பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க, தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'டக்கு முக்கு டிக்குதாளம்' படம்! இதில் தங்கர் பச்சனின் மகன் விஜித் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் கஸ்தூரி ராஜா பேசியபோது, ''விஜித் பச்சான் சூப்பர் ஹீரோவாக வருவதற்கான பல அறிகுறிகள் இந்த படத்தில் தெரிகிறது. என் மகன் தனுஷை வைத்து 'துள்ளுவதோ இளமை' படத்தை எடுத்தபோது, அதை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. ''நமது பையனை நாம் பார்க்கலாம். காசு கொடுத்து பார்ப்பவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்'' என்றார் ஒருவர். பின்னர் அவரே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ''எப்படியாவது தனுஷ் படத்தை வாங்கி கொடுங்கள்'' என்று கேட்டார். விஜித்தும் அதுபோல வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குனர் வெற்றி மாறன் பேசும்போது, ''தங்கர் பச்சான் ஒளிப்பதிவில் பல படங்கள் பெரிய வெற்றிகளைக் கொடுத்திருக்கிறது. இயக்குநராகவும் வெற்றி பெற்றிருக்கிறார். விஜித் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதும் உடனே நடிக்க வைக்காமல் 8 ஆண்டுகள் பயிற்சிகள் கொடுத்து பல தேர்வுகள் வைத்து இன்று நடிக்க வைத்திருக்கிறார். முதல் படத்தில் எந்தளவிற்கு நடிக்க முடியுமோ அதை சிறப்பாக நடித்திருக்கிறார்'' என்றார்.
உணர்வை திரையில் பதிவு செய்பவர்கள் தான் சிறந்த இயக்குனர்.காட்டிற்குள் போகும்போது பல விலங்குகளின் கால் தடங்கள் இருக்கும். ஆனால்,யானை மற்றும் புலியின் கால் தடங்கள் தான் கவனத்தை ஈர்க்கும். அதேபோல்,சிலர் தான் தங்களின் கால் தடங்களைப் பதிப்பார்கள். அதில் ஒருவர் தங்கர்பச்சான்.'' என்றார்
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, ''விஜித்திற்கு கண் அழகாக இருக்கிறது. அது அவருக்கு பெரிய ப்ளஸ். தங்கர் பச்சான் ஒரு முன் கோபி.
ஆட்டோகிராப் படத்தின் விழாவில் கிளாசிக் படங்களை புகழ்ந்து பேசி,கமர்ஷியல் படத்தை விமர்சித்தார். நான் கமர்ஷியல் இயக்குனர் தான்.ஆகையால், தான் அவர் படங்களை ஒப்பீட்டு பார்க்க முடிகிறது. இருப்பினும்,இப்போது அவரே கமர்ஷியல் படம் இயக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது''என்றார்.
இயக்குனர் தங்கர் பச்சான் பேசும்போது, '' டக்கு முக்கு டிக்கு தாளம்' மாறிக் கொண்டே இருக்கும். அதுதான் இப்படம். ஒருவனிடம் பணம் நிறைய இருக்கிறது. ஆனால், அவனிடம் நிம்மதி இல்லை. இன்னொருவன் பணம் கையில் இல்லை.
அவர்கள் என்னவாகிறார்கள் என்பதே இப்படத்தின் ஒருவரி கதை. நான் தீவிரமான எம் ஜி ஆர் ரசிகன். சிறு வயதில் எந்த படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கிறதோ அந்த படத்திற்குத்தான் செல்வேன். அப்படித்தான்சினிமா வளர்த்தெடுத்தது.
என் மகன் விஜித் என்னுடைய இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாகஇருந்தான். இல்லையென்றால் 6 வருடங்களுக்கு முன்பே நடிக்க வைத்திருப்பேன்.
பல பேரிடம் கதைகளை கேட்டான். அதில் சில படங்கள் மாபெரும் வெற்றிப்பெற்றிருக்கிறது. சில படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது'' என்றார்…
தயாரிப்பாளர் சரவண ராஜா பேசும்போது,
எங்களுக்கு சினிமாவில் நேரடியாக தொடர்பு கிடையாது. இத்திரைப்படம் தொடங்கியதில் ஒரு மையப்புள்ளி இருக்கிறது. என் நண்பர் ஜார்ஜ் டயஸ்-க்குசினிமாத் துறையில் கால் பதிக்க வேண்டும் என்று கூறினார். அப்படித்தான் இப்பயணம் தொடங்கியது. தங்கர் பச்சான் அண்ணனின் நம்பிக்கையில் ஒவ்வொருஅடியும் எடுத்து வைத்திருக்கிறோம்.எங்கள் அலுவலகத்தில் ஒரு பகுதியை கொடுத்திருந்தோம். அவர் அலுவலகத்தை வைத்திருப்பதும் ஒரு அழகு. தேநீர் அருந்துவதும் அழகு. இப்படம் ஒரு கூட்டுமுயற்சி. அதை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்திருக்கிறார். சோனி மியூசிக்நிறுவனம் முன்வந்தது எங்களுக்கு மைல்கல். விஜித் வெற்றியடைய வாழ்த்துகள்என்றார்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜார்ஜ் டயஸ் பேசும்போது,
விஜித்தை எனக்கு 8 வருடங்களாக தெரியும். 5டி கேமராவைக் கற்றுக் கொடுத்ததுவிஜித் தான். அதேபோல் படம் பிடித்து எனக்கு காண்பித்தார். விஜித்எப்போதும் சும்மா இருக்க மாட்டார். அவ்வப்போது, என்ன செய்கிறாய் என்று கேட்பார். சும்மாதான் இருக்கிறேன் என்று கூறினால், நடனம் கற்றுக்கொள்ளலாம், அதைக் கற்றுக் கொள்ளலாம் என்று ஒவ்வொன்றாக அழைத்துச்செல்வார். அவர் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்
நடிகர் விஜித் பச்சான் பேசும்போது,
என் முகத்தை பார்க்காமலேயே தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்களுக்கு மிக்கநன்றி. அழகி படத்தை விடவும் இந்த படத்தில் தான் அப்பா பதட்டமாக இருந்தார். கஸ்தூரி ராஜா சார் வீட்டிற்கு முன்பே சென்றிருக்கிறேன். அவரின் கையால் இந்த இசைத்தட்டு வெளியீட்டு விழா நடப்பது மகிழ்ச்சி. வெற்றிமாறன் அறிமுகத்தில் வருவதில் மகிழ்ச்சி. தினேஷ் மாஸ்டருக்கும் எனக்கு நல்ல புரிதல் இருக்கிறது. சில்வா மாஸ்டர் என்னை அடித்து சொல்லிக் கொடுத்தார். சாபு சார் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார்.பத்திரிகையாளர்களும், மக்களும் பல நடிகர் நடிகைகளின் நிறை குறைகளை சுட்டிக் காட்டியது போல் என்னிடம் இருக்கும் நல்லது கெட்டதுகளை சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்'' என்றார்.
இறுதியாக, படத்தின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது.