இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா!

இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இயக்குகுனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் சூப்பர் டைரக்டரான மணிரத்னம், தற்போது அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற வரலாற்று நாவலை படமாக்கி வருகிறார். இந்தப் படத்தில் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் டீஸர்  நிகழ்ச்சி சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், விரைவில் 'பொன்னியின் செல்வன்' படத்தை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது..

logo
Kalki Online
kalkionline.com