ஆகஸ்ட் 1 முதல் தெலுங்கானாவில் அனைத்து படப்பிடிப்புகலும் நிறுத்தப் படுவதாக அம்மாநிலத்தின் ஆக்டிவ் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
-இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனாவால் உலகம் முழுக்க வருவாய் சூழ்நிலைகள் முற்றிலும் மாறி சவால்கள் நிறைந்ததாகி விட்டது. சினிமாவில் தயாரிப்பு செலவுகள் அதிகரித்து விட்டது. ஆனால் தியேட்டர்களில் வெளியிட முடிவதில்லை.
இன்னும் பல பிரச்சினைகளை திரைப்படத் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் இதுகுறித்து விரிவாகப் பேசி விவாதிப்பது அவசியமாகிறது.
மேலும், ஆரோக்கியமான சூழலில் திரைப்படங்களை வெளியிடுவதை உறுதி செய்வது, நம்முடைய பொறுப்பு. எனவே தெலுங்குத் திரையுலகில் சினிமாத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தாமாக முன்வந்து அனைத்து படப்பிடிப்புகளையும் ஆகஸ்ட் 1 முதல் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
-இவ்வாறு ஆக்டிவ் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.