நடிகர் சந்தானத்துக்கு நடுக்கடலில் பேனர்!

நடிகர் சந்தானத்துக்கு நடுக்கடலில் பேனர்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

நடிகர் சந்தானத்துக்கு அவரது ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் கட்டி அதற்கு பால் அபிஷேகம் செய்த விவகாரம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-இதுகுறித்து அவரது ரசிகர்கள் தெரிவித்ததாவது;

நடிகர் சந்தானம் நடித்து நாளை வெளியாக உள்ளது 'குலு குலு' திரைப்படம். அதைக் புதுமையாகக் கொண்டாடும் வகையில் இப்படி  நடுக்கடலில் பேனர் வைக்கத் தீர்மானித்தோம். அதன்படி பேனர் கட்டி ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர்.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் நடுக்கடலில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் உடைந்து, இரும்பு தூண்கள் மட்டும் நடுககடலில் காட்சி அளிக்கிறது. இந்த தூணில் நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படத்தை வாழ்த்தி நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

logo
Kalki Online
kalkionline.com