‘காதல் வித் திரில்லர்’ ஜானரில் விஷ்வக் சென் திரைப்படம்!

‘காதல் வித் திரில்லர்’ ஜானரில் விஷ்வக் சென் திரைப்படம்!

ளம் கதாநாயகன் விஷ்வக் சென் இயக்கி, நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற. 'ஃபலக்னுமா தாஸ்' திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் தயாராகி இருக்கும் அடுத்தத் திரைப்படம், 'தாஸ் கா தம்கி.' தெலுங்கு திரை உலகின் நம்பிக்கை நட்சத்திரமான இவரது நடிப்பில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்தியத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, அண்மையில் இப்படத்தின் முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. முன்னோட்டத்தைக் கண்டு களித்த ரசிகர்களிடம் இருந்து பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. முன்னோட்டத்தில் இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது, 'தாஸ் கா தம்கி' திரைப்படம் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என அந்தப் படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

‘வன்மயே கிரியேஷன்ஸ்’ மற்றும் ‘விஷ்வக் சென் சினிமாஸ்’ பட நிறுவனங்களில் சார்பில் கராத்தே ராஜு தயாரித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகனாக விஷ்வக் சென் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராவ் ரமேஷ், ஹைப்பர் ஆதி, ரோகிணி, பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கே.பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை அன்வர் அலி கவனிக்க, பிரசன்ன குமார் பெசவாடா வசனம் எழுதியிருக்கிறார். அழகான காதலுடன் கூடிய திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் இப்படம் தயாராகி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com