காலங்களில் அவள் வசந்தம்! வரவேற்கலாம்!

திரை விமர்சனம்!
காலங்களில் அவள் வசந்தம்
காலங்களில் அவள் வசந்தம்

நீண்ட இடைவெளிக்கு பின்பு தமிழில் வந்துள்ள காதல் படம் "காலங்களில் அவள் வசந்தம்". ராகவ் மிதார்த் இயக்கியுள்ள இப்படத்தில் அறிமுக நாயகன் கௌசிக்ராம், அஞ்சலி, ஹிரோஷினி நடித்துள்ளார்கள்.

பார்க்கும் சினிமாக்களே வாழ்க்கை என நினைத்து பெண்களை காதலிப்பதை பொழுதுபோக்காக கொண்டவர் ஷியாம் (கௌசிக்). இவரை பார்த்தவுடன் ராதேக்கு(அஞ்சலி ) காதல் வருகிறது. திருமணத்திற்கு பின்பு ஷியாமின் பழைய காதல் தெரிய வர இருவருக்குள் பிரச்சனை ஏற்பட்டு டைவர்ஸ் வரை செல்கிறார்கள். இறுதியில் ஓருவரை ஓருவர் புரிந்து கொள்கிறார்களா? என்பதை டைரக்டர் கதையாக சொல்லியிருகிறார்.

 அஞ்சலி நாயர் - கௌசிக்ராம்
அஞ்சலி நாயர் - கௌசிக்ராம்

சுவாரசியமான திருப்பங்கள் எதுவும் இல்லை என்றாலும் உணர்வுகளின் தொகுப்பாக படத்தை நகர்த்தி செல்கிறார் டைரக்டர். படத்தின் குறைவான நீளம் இப்படத்திற்கு ஒரு பலமாக இருக்கிறது. கௌசிக் பல காட்சிகளிலும் ஒரே போன்று முகபாவனைகளை காட்டுகிறார்.

அடுத்த படத்தில் நல்ல நடிப்பை எதிர்பார்ப்போம். கண்களில் கவர்ச்சி, சோகம், பிரிவு, காதல் என பல உணர்வுகளை மிக நன்றாக சொல்கிறார் அஞ்சலி நாயர். சரியான வாய்ப்புகள் கிடைத்தால் அடுத்த சினேகா அஞ்சலி தான்.

காலங்களில் அவள் வசந்தம் திரைப்படம்
காலங்களில் அவள் வசந்தம் திரைப்படம்

ஹரிஷ்.ஆர். இசையில் பாடல்கள் கேட்கும் படி இருக்கிறது. "பாசிட்டிவ் மட்டும் பார்ப்பது காதல் இல்லை. நெகட்டிவையும் ஏற்றுக்கொள்வதும் காதல் தான்" என்ற வசனங்கள் சம கால காதலை சொல்கிறது. நல்ல கதையில் திரைக்கதை நன்றாக இருந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். 'காலங்களில் அவள் வசந்தம்' -வரவேற்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com