
இயக்குனர் ராஜமவுலி படத்தில் வில்லியாக நடிக்க காஜல் அகர்வாலுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து சிறப்பு பெற்றவர்.
இந்த நிலையில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் காஜல் அகர்வாலை வில்லியாக நடிக்க வைக்க பட குழுவினர் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் படக்குழு ஐஸ்வர்யா ராயை புதிய படத்தில் வில்லியாக நடிக்க வைக்க திட்டமிட்டு வந்ததாகவும், ஆனால் சில காரணங்களால் ஐஸ்வர்யா ராய் அதை தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காஜல் அகர்வால் இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பட குழுவினர் காஜல் அகர்வால் உடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் ஹீரோயினை விட கூடுதல் சம்பளம் வழங்குவதாகவும் தற்போது பேச்சுவார்த்தை மேற்கொண்டு இருக்கின்றனர்.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மகதீரா படத்தின் மூலம் பிரபலமடைந்த காஜல் அகர்வால் தற்போது மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் வில்லியாக நடிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை மேலும் உயர்த்த ராஜமவுலி திட்டமிட்டு இருக்கிறார் என்றும் பட குழு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ஹீரோயினுக்கான வாய்ப்புகளே அதிகம் தேடி வரும் நேரத்தில் வில்லியாக அறிமுகமானால் வருங்காலத்தில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடுவோம் என்ற அச்சத்தில் காஜல் அகர்வால் தரப்பில் இருந்து தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறதாம்.