தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் 100 விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு!

Rajinikanth
Rajinikanth

மிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் கலைஞர் 100 விழாவில் கலந்துகொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பு.

மறைந்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொது குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் 100 விழா பிரம்மாண்டமாக நடத்த முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் என். ராமசாமி, செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுத்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் கமலஹாசனையும் சந்தித்து கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். இருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறுதி அளித்திருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Kamalhasan
Kamalhasan

மேலும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் சங்கமும் முழு ஒத்துழைப்பு அளிக்க இருப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தற்போது தனது மக்கள் இயக்கத்தின் மூலம் தீவிர அரசியலை முன்னெடுத்து வரும் விஜய் கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்வது சந்தேகமே என்று சொல்லப்படுகிறது. தற்போது நடைபெற்று முடிந்த லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கூட மறைமுகமாக திமுகவை சாடுவது போன்ற வசனங்களை நடிகர் விஜய் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com