ஒரே நாளில் 22.53 மணி நேரத்தில் படமாக்கிய “கலைஞர் நகர்” !
ஒரே நாளில் ஒரு படத்தை இயக்க முடியுமா என ஆச்சர்யமாக இருக்கிறதா? நிச்சயம் முடியும் என நிருபித்திருக்கிறார் இயக்குனர் சுகன் குமார்.
ஏற்கனவே “பிதா” என்ற படத்தை 23.23 மணி நேரத்தில் இயக்கிய சுகன் குமார், தற்போது ‘கலைஞர் நகர்’ என்ற படத்தை 22.53 மணி நேரத்தில் படமாக்கி சாதனைப் படைத்து ள்ளார்.
இந்த திரைப்படத்தில் ஹீரோவாக பிரஜன் நடித்துள்ளார். ஹீரோயினாக பிரியங்கா மற்றும் லிவிங்ஸ்டன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
‘கலைஞர் நகர் படம் பற்றி இயக்குனர் சுகன் குமார் கூறும் போது, “ இது முழுக்க மேடை நடனக் கலைஞர்களை மையப் படுத்திய படம். அதனால் ‘கலைஞர் நகர்’ என தலைப்பு வைத்துள்ளோம். 5 கேமராவை பயன்படுத்தினோம். 23 மணி நேரத்துக்குள் படத்தை எடுத்ததற்கு நான் மட்டும் காரணம் இல்லை. என் கடைசி உதவியாளர் வரை உழைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் இளையராஜா, எடிட்டர் சந்தீப், இசையமைப்பாளர் நரேஷ், நடிகர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல் பட்டனர்.
அவர்களால் தான் இது சாத்தியமானது. 3 பாடல்கள், 2 சண்டைக் காட்சிகளையும் படமாக்கி யுள்ளோம். முதல் நாள் 2.30 மணிக்கு படப்பிடிப்பைத் தொடங்கி மறுநாள் 1.23 மணிக்கு முடித்தோம் ” என்று தெரிவித்தார்.
ஒரே நாளில் படமாக்கிய கலைஞர் நகர் திரைப்படம் ரசிகர்களிடையேயும் நல்ல விமர்சனைத்தை பெற்று வசூலிலும் சாதனை படைக்குமா ? என்பதே சினிமா வட்டாரத்தினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.