கலகலப்பு 3 - கதாநாயகனாக கலக்கப் போவது யார்? ஜெய்? சிவா? கவின்? ஜீவா?

கலகலப்பு 3...
கலகலப்பு 3...

மிழ் சினிமாவில் காமெடி படங்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் என்ற பெருமைக்குரியவர் சுந்தர்.சி. இவர் ஒரு மிகச்சிறந்த திரைப்பட நடிகரும்கூட. சினிமாத் துறையில் இவர் ஒரு இயக்குநராக ஹிட் மற்றும் ஃபிளாப் படங்கள் இரண்டையுமே சரிசமமாக பார்த்து உயர்ந்தவர். அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் பயங்கர ஹிட் அடித்த திரைப்படம் என்ற வரிசையில் கலகலப்பு திரைப்படமும் ஒன்று. இத்திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்குவதன் தொடக்கப்புள்ளியாக கதையின் ஹீரோ கதாபாத்திரத்திற்கு எந்த நடிகரைத் தேர்வு செய்துள்ளார் தெரியுமா?

இயக்குநராக சுந்தர்.சி:

டந்த 2014ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம்தான்  'அரண்மனை'. ஒரு காமெடி கலந்த திரில்லர் படமாக இதனை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதுபோன்ற கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை நன்றாக புரிந்துகொண்ட இவர், அரண்மனை படத்தின் இரண்டாவது பாகத்தையும் இயக்கினார். இதுவும் ஹிட்டடித்ததை தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு  'அரண்மனை 3' படத்தையும் இயக்கினார். ஆனால், இப்படம் வசூல் ரீதியாக பின்னடைவைத் சந்தித்தது.

அதனைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய 'காபி வித் காதல்' படமும் ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான வரவேற்பை எட்டவில்லை. இந்நிலையில் இவர் தற்போது அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகத்தை இயக்கியுள்ளார். கடந்த பொங்கலுக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், திடீரென படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் ஒத்தி வைத்துவிட்டனர்.

கலகலப்பு திரைப்படம்:

சுந்தர்.சியின் இயக்கத்தில் வெளியான மாஸ் ஹிட் திரைப்படங்களுள் ஒன்றுதான் கலகலப்பு. இத்திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தினை இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கலகலப்பு திரைப்படம் விமல், அஞ்சலி, மிர்ச்சி சிவா, ஓவியா, சந்தானம் உள்ளிட்ட பலரது நடிப்பில் ஒரு காமெடி படமாக வெளியானது. அதுமட்டுமின்றி இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி, நல்ல வரவேற்பினை பெற்றது.

அதன் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜெய், ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா உள்ளிட்டோர் நடிப்பில் கலகலப்பு 2 படத்தினை இயக்கினார் சுந்தர் சி. இதுவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினையும் பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் பெருகச்செய்தது. எனவே, அடுத்தபடியாக 'கலகலப்பு 3' படத்தை இயக்க சுந்தர்.சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹீரோ யார்?

ற்போது அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கி முடித்துள்ள சுந்தர் சி, அடுத்ததாக கவின் நடிப்பில் 'கலகலப்பு 3' படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், கவின் வரிசையாக அடுத்தடுத்து இயக்குநர் நெல்சனின் திரைப்படம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படத்திலும் கமிட்டாகியுள்ளார் என்பதால் அவரால் சுந்தர்.சி இயக்கும் 'கலகலப்பு 3' படத்தில் நடிக்க இயலுமா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் சரிவர வெளிவர இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com