"வதந்திகளை பரப்பாதீர்கள்.. நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை" - கல்பனா வாக்குமூலம்..

kalpana
kalpana
Updated on

வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தான் தற்கொலை செய்யவில்லை எனவும் பாடகி கல்பனா வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரபல பின்னணி பாடகி கல்பனா, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவருடைய வீட்டின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்ததை அடுத்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் வீட்டின் கதவுகளை உடைத்து கல்பனா அறைக்கு சென்றனர். அங்கே அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மயங்கிய நிலையிலேயே கல்பனா வீல் சேரில் மருத்துவமனை சென்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் கல்பனா தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதாக தெரிவித்தனர். இதனால் மக்களும், போலீசாரும் அவர் தற்கொலை முயன்றதாக கூறி நேற்று சர்ச்சையை கிளப்பினர். இந்த நிலையில், சுயநினைவு பெற்ற கல்பனா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தான் தற்கொலைக்கு முயலவில்லை என்றும், தவறாக வதந்திகள் பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்தார். எனது கணவர் மிகவும் நல்லவர், எனக்கு இறைவன் அருளால் அழகான குடும்பம் கிடைத்துள்ளது என்று பேசினார்.

மேலும் தான் ஒரு insomnia நோயாளி என்றும், தூக்கமின்மையால் மருத்துவர்கள் எனக்கு தூக்க மாத்திரகள் பரிந்துரைத்திருப்பதாகவும் கூறினார். சம்பவ தினத்தன்று மன அழுத்தத்தால் தூங்க வேண்டும் என்று அதிக தூக்க மாத்திரைகள் உட்கொண்டு சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்தார். தற்போது நலமாக இருப்பதாகவும், எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறியுள்ளார்.

யார் இந்த கல்பனா?

சிறு வயதில் இருந்தே பாடி வரும் கல்பனா இதுவரை பல்வேறு மொழிகளில் 1,500 பாடல்கள் பாடியிருக்கிறார். கமல் ஹாசன் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் படத்தில் கவுரவத் தோற்றத்திலும் வந்திருக்கிறார். இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்களின் இசையில் பாடியிருக்கிறார். கடந்த 2010ம் ஆண்டு நடந்த ஸ்டார் சிங்கர் மலையாளம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் கல்பனா. ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார். அதன் பிறகு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

தற்கொலை சர்ச்சைக்கு பிறகு மீண்டு வந்த கல்பனா பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
குடும்பஸ்தன் முதல் சுழல் 2 வரை.. இந்த வாரம் ஓடிடியில் ...
kalpana
logo
Kalki Online
kalkionline.com