கமலின் 237 பட அப்டேட்.. அடுத்தடுத்து கமிட் ஆகும் படங்களால் ரசிகர்கள் குஷி!

கமல்
கமல்

கமல்ஹாசனின் 237வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்திற்கு பிறகு கமலிற்கு மவுசு அதிகமாகியுள்ளது. தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமலின் அடுத்தடுத்த லைன் அப்கள் மிரட்டலாக உள்ளன. கிட்டத்தட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை கமல் நிறைவு செய்துள்ள நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தக் லைஃப் படத்தில் நடிக்க தயார் ஆகிவிட்டார் கமல். இந்த படத்தை பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களை தொடர்ந்து கமலை இயக்கவுள்ளார் மணிரத்னம். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அவரது 237ஆவது படத்தின் அப்டேட் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இடையே உள்ள 235 மற்றும் 236 படங்கள் என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கமல்ஹாசனின் 235 படமாக பிரபாஸ், அமிதாப் பச்சனுடன் நடிக்கும் கல்கி படம் அமையும் என கருதப்படுகிறது. அதற்கடுத்து 236 படத்தின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம்-2 ஆக இருக்கும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதன்பின் தான் 237ஆவது படத்தின் அப்டேட்டை ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது.

விக்ரம் படத்திற்கும், தக் லைப் பர்ஸ்ட் லுக் வீடியோவிற்கும் சண்டை காட்சி அமைத்து பாராட்டு பெற்ற அன்பறிவு மாஸ்டர்கள், கமலின் 237ஆவது படத்தினை இயக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இருக்கும் என உறுதியாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com