22,000 அடி உயரத்தில் கமல்ஹாசன்!

22,000 அடி உயரத்தில் கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், அங்கு அவர் கேமரவுடன் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகிய நிலையில், அவரை வேறொரு கோணத்தில் ரசிக்க வைத்து வருகிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் முதல் பாகம், மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம், எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவருகிறது.

இப்படத்தை, லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் நிலையில், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், குரு சோமசுந்தரம் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சில வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் சில பல காரணங்களால் படப்பிடிப்புகள் தள்ளிப்போன நிலையில், தற்போது இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி, தொடர்ந்து படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில்கூட, காளிதாஸ் ஜெயராமும் இப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு நடக்கும் விவரமும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தைவான் நாட்டில் நடந்துவந்த நிலையில், இப்போது படக்குழுவினர் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, உலக நாயகன் கமல்ஹாசன் 'இந்தியன் 2' மிடில் ஏஜ் கமல்ஹாசன் கெட்டப்பில் கையில் கேமராவுடன் இருக்கும் புகைப்படங்களும், ரிலாக்ஸான மனநிலையில், அவரது அறையில் இருக்கும் ஒரு பொருளின் மீது தனது கைகளால் தட்டியே இசையை வரவழைப்பது என இயல்பாக இருக்கும் வீடியோ என தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில், அவர் தற்போது விமானத்தில், பைலட்டின் அருகே அமர்ந்து, அவரிடம் சில விஷயங்களை கேட்டு கற்றுக்கொள்கிறார். இந்த வயதிலும் அவருடைய கற்றுக்கொள்ளும் ஆர்வம் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. அப்போதும் அவர் கையில் கேமரா இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'Flying together . Altitude 22,000 ft!' என்று பதிவிட்டு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com