இந்த வயதிலும் ராதிகாவுடன் குத்தாட்டம் போட்ட கமல்ஹாசன்! வெளியான வீடியோ!

இந்த வயதிலும் ராதிகாவுடன் குத்தாட்டம் போட்ட கமல்ஹாசன்! வெளியான வீடியோ!

சிறு வயதிலேயே திரையுலகில் கால் பதித்து ரசிகர்களால் உலக நாயகனாக வளர்ந்து இன்றும் வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருப்பவர் கமல்ஹாசன். அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும், திரையுலகிலும் தனது பங்கு சிறிதளவும் குறையாமல் ரசிகர்களுககு விருந்து படைத்து வருகிறார்.

அதுவும் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைவிட பல மடங்கு உயர்ந்து கோலிவுட் திரையுலகையே உலக அளவில் அன்னாந்து பார்க்கும்படி வைத்தது.

அதைத் தொடர்ந்து கமல் அடுத்து யார் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவு அதிகரித்தது. அதன்படி, 'கமல் 233' படத்தை யார் இயக்கப்போகிறார்? இவரா? அவரா? என்ற குழப்பமே தீராத போதிலும், 'கமல் 234' படத்தை மணிரத்னம் இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உறுதியானது.

இந்நிலையில் அடுத்தடுத்து படங்களிலும், அரசியலிலும், பிக்பாஸிலும் பிஸியாக இருந்துவரும் கமல்ஹாசனின் பிறந்தாள் நவம்பர் 07ம் தேதி ரசிகர்களாலும், நலம்விரும்பிகளாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக, திரை நட்சத்திரங்கள் பங்குகொள்வதற்காக ஒரு பிரமாண்ட பார்ட்டியையும் கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த கொண்டாட்டத்தில், நடிகை ராதிகா சரத்குமாருடன், கமல்ஹாசன் அவர்கள், 'விக்ரம்' படத்தில் இடம்பெற்ற 'பத்தல பத்தல...' பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த காட்சியானது தற்போது வீடியோவாக வெளியாகி உள்ள நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com