'இந்தியன் 2' முதல் 'தக் லைஃப்' படம் வரை... அடுத்தடுத்த அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்!

Kamal Haasan
Kamal Haasan

இந்தியன் 2, இந்தியன் 3, தக் லைஃப் மற்றும் கல்கி 2829 AD ஆகிய நான்கு படங்களின் அப்டேட்டுகளை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் செம்ம பிசியான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கமல்ஹாசன். விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். தீவிர அரசியலில் இறங்கிய பின், திரையுலகிலிருந்து அவர் நிரந்தரமாக ஒதுங்கிவிடுவார் என பயந்த ரசிகர்களுக்கு கமலின் முடிவு மகிழ்ச்சி அளித்தது. கமல் நடிப்பில் இந்தியன் 2, இந்தியன் 3, தக் லைஃப், கல்கி 2898 AD என பல படங்கள் வெளியாக உள்ளன.

இதுதவிர தயாரிப்பாளராகவும் செம்ம பிசியாக உள்ள கமல், தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் சிவகார்த்திகேயனின் அமரன், சிம்பு நடிக்க உள்ள எஸ்.டி.ஆர் 48 போன்ற படங்களை தயாரிக்கிறார். அதேபோல் தன்னுடைய நடிப்பில் உருவாகும் தக் லைஃப் படத்தை மணிரத்னம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். இதுமட்டுமின்றி தன்னுடைய மகள் ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் இணைந்து நடித்துள்ள இனிமேல் என்கிற ஆல்பம் பாடலையும் தயாரித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
ரீ ரிலீசான 'சிவகாமியின் செல்வன்'... 50 வருடம் கழித்து இவ்வளவு வரவேற்பா?
Kamal Haasan

இவர் நடிக்கும் படத்தின் நிலை என்ன, எப்போது வெளியாகும் என்பது குறித்து, கமல் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார். அதில், இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், தற்போது இந்தியன் 2 படத்திற்கான பின்னணி பணிகள் நடைபெற்று வருவதாகவும் அது முடிந்ததும் இந்தியன் 3 பட பின்னணி பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறி உள்ளார். மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பில் தேர்தலுக்கு பின்னர் கலந்துகொள்ள உள்ளதாக கூறிய கமல், தான் கல்கி 2829 AD படத்தில் வெறும் கெஸ்ட் ரோலில் மட்டும் நடிப்பதாக உறுதிபடுத்தி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com