KH 234 படம் குறித்து புதிய அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்!

kamal haasan mani ratnam
kamal haasan mani ratnam

டிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து 35 வருடங்களுக்கு பிறகு KH 234 படத்தின் மூலம் இணைகிறார்கள். இந்நிலையில், KH 234 படம் குறித்து புதிய அப்டேட்டை ரசிகர்களிடம் நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்துக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவி யில் ஒளிப்பரப்பப்படும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருவது அனைவரும் அறிந்ததே. இந்நிகழ்ச்சியில் அவ்வபோது பல சுவாரஸ்யமான விஷயங்களை கமல்ஹாசன் பகிர்ந்துக்கொள்வார். அந்தவகையில் கடந்த 22ம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ப்ரோமோ வெளியானது. அதில் நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் இணையும் புதிய படத்தின் பணிகள் அக்டோபர் 23ம் தேதி முதல் தொடங்க உள்ள என்றும், படத்தின் டீசர் நவம்பர் 7ம் தேதி (கமல்ஹாசன் பிறந்தநாள்) வெளியிடப்படும் என அப்டேட் கொடுத்தார்.

கமல்ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்கும் படத்திற்கு தற்போதுவரை பெயர் வைக்கப்படவில்லை. ஆனால், இந்த படம் கமலின் 234வது படம் என்பவதால் ரசிகர்கள் இந்த படத்தினை KH 234 என அழைத்துவருகிறார்கள். முன்னதாக கடந்த நவம்பர் 2022 ல் கமலஹாசன் தனது X தளத்தில் ”மீண்டும் இணைகிறோம் ( KH 234 )” என்று மனிரத்னம் கமலஹாசன் இணையும் அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இயக்குனர் மனிரத்னம் கமலஹாசன் 35 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணைவது இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மனிரத்னம் இயக்கும் KH 234 முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு, ஜெயம் ரவி மற்றும் கதாநாயகியாக திரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நயந்தாரா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com