‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டரில் வந்து செல்வது கொஞ்சம் ஓவரா இல்லையா கமல்?

‘இந்தியன் 2’ புதிய அப்டேட்
‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டரில் வந்து செல்வது கொஞ்சம் ஓவரா இல்லையா கமல்?

 ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் கமலஹாசன் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 

நடிகர் கமல்ஹாசன் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது ‘இந்தியன்’ படம். அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

2019 ஆம் ஆண்டு தொடங்கியது  இந்தியன் 2 படம், படத்தின் தொடக்க விழாவுக்கே இந்தியன் தாத்தா கெட்டப்பில் வந்து அசத்தினார் கமல்ஹாசன்.

தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 2020ம் ஆண்டு படப்பிடிப்பின்போது க்ரேன் உடைந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் கொரோனா கட்டுப்பாடுகள், அதனைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் - தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இருவரிடையே படத்தின் பட்ஜெட் குறைப்பதில் தலைதூக்கிய பிரச்னை உயர் நீதிமன்றம் வரை சென்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, கிச்சா சுதீப், குல்சான் குரோவர், சமுத்திரகனி, குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியர், மனோபாலா டெல்லி கணேஷ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.

இசை அனிருத், ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து படத்தை தயாரிக்கிறது.

பல கட்டங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்றுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி முதல் திருப்பதியில் நடைபெற்றுப் வருகிறது. திருப்பதி மலைப்பகுதிக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட செட்டில் கமல்ஹாசன், சித்தார்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன், திருப்பதி வனப்பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தனியாக ஹெலிகாப்டரில் வந்து செல்கிறார். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் “படப்பிடிப்புக்காக ஹெலிகாப்டரில் வருவது எல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா?” என கேள்விகள் கேட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com