
ரஜினிகாந்த் நடித்த முத்து படமும், கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படமும் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆன நிலையில் அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பற்றி பார்க்கலாம்.
80ஸ் முதல் தற்போது வரை உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர்கள் தான் நடிகர் ரஜினிகாந்த்,கமல்ஹாசன். இருவரும் இன்றளவும் படம் நடித்து மாஸ் காட்டி வருகின்றனர்.சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படமும், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படமும் மெஹா ஹிட் அடித்தது. இந்த நிலையில் இருவரும் பழைய படங்கள் தற்போது ரி ரிலீஸ் ஆகி வசூல் குவித்துள்ளது.
2 படங்களில் எந்த படம் அமோக வசூல் பெற்றுள்ளது என்பதை இதில் பார்க்கலாம். அதன்படி நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படம் நான்கு நாட்கள் முடிவில் ரூ.92 லட்சம் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 60 லட்சம் வசூலித்துள்ள இப்படம், இதர மாநிலங்களில் 9 லட்சமும், வெளிநாடுகளில் 25 லட்சமும் வசூலை வாரிக்குவித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் ரீ-ரிலீஸில் வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளதாம். இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.26.5 லட்சம் வசூலித்துள்ளதாம் முத்து திரைப்படம். இதன்மூலம் இந்த ரீ-ரிலீஸ் மோதலில் கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் தான் வாகைசூடி இருக்கிறது.
ஆளவந்தான் திரைப்படம் கடந்த 2001-ம் ஆண்டு ரிலீஸ் ஆன போது அப்படம் யாருக்குமே புரியவில்லை என்கிற விமர்சனம் எழுந்ததோடு, பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியையும் சந்தித்தது. அன்று பிளாப் ஆன இப்படம் இன்றைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது என்பது இந்த ரீ-ரிலீஸ் மூலமே தெரிகிறது.