நான்கு பெண்களின் வாழ்க்கை முறைகளை விவரிக்கும், ‘கண்ணகி’ திரைப்படம்!

நான்கு பெண்களின் வாழ்க்கை முறைகளை விவரிக்கும், ‘கண்ணகி’ திரைப்படம்!
Published on

ஸ்கை மூன் எண்டெர்டைன்மெண்ட் & E5 எண்டெர்டைன்மெண்ட் சார்பில் M.கணேஷ் மற்றும் J.தனுஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கண்ணகி’. பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, கீர்த்தி பாண்டியன் ஆகிய நால்வரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் வெற்றி, ஆதிஷ் ஆகியோர் தோன்றுகின்றனர்.

யஷ்வந்த் கிஷோர் இந்தப் படத்தை இயக்குகிறார். ராம்ஜி ஒளிப்பதிவை கவனிக்க, சரத் K படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஷான் ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது இந்தப் படத்தில் இருந்து ‘ங்கொப்புரானே ங்கொப்புரானே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ தயாராகி உள்ளது. கார்த்திக் நேத்தா எழுதிய இந்தப் பாடலை, ஸ்ரீநிதி பாடியுள்ளார். இந்த லிரிக் வீடியோவை ஜீவி மீடியா ஒர்க்ஸ் கோகுல் வெங்கட் ராஜா உருவாக்கியுள்ளார்.

நான்கு பெண்களின் வெவ்வேறு விதமான வாழ்க்கை முறைகளை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் கலை என்ற இளம் பெண் கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி நடித்துள்ளார்.

திருமணத்திற்கு தயாராகும் அம்மு அபிராமி வரன் பார்த்தல் என்கிற அந்த வைபவத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்கிற கான்செப்டில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.

பாடல் குறித்து இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் கூறும்போது, “ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் பெண் பார்த்தல் என்கிற வைபவம் ரொம்பவே முக்கியமானது. அம்மு அபிராமிக்கு அவரது வீட்டினர் திருமணம் செய்ய எடுக்கும் முயற்சியில் இருந்து துவங்குவதாக இந்தப் பாடல் ஆரம்பிகிறது.

பெண் பார்க்க வரும் மணமகன்களில் ஒருவர் என்ன காரணங்களால் நிராகரிக்கப்படுகிறார் என்பதும் இன்னொருவர் எந்த அடிப்படையில் மணமகனாக ஏற்கப்படுகிறார் என்பதும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வில் ஒரு மணப்பெண்ணுக்கே உரிய கட்டுப்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் எப்படி இருக்கின்றன என்பதைக் கலை என்ற ஓர் இளம் பெண்ணின் மனதில் இருந்து பிரதிபலிக்கும் விதமாகக் காட்சி அமைந்துள்ளது” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com