பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் காந்தாரா 2!

kantara 2
kantara 2

100 கோடி ரூபாய் செலவில் காந்தாரா இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு.

கடந்த ஆண்டு கன்னட மொழியில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை பெற்ற சாதனை படைத்தது‌ படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்ததை தொடர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

8 கோடி ரூபாய் மதிப்பில் வெளியான காந்தாரா 400 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. மேலும் படத்தின் விமர்சனமும் படக்குழுவிற்கு மேலும் வலிமை சேர்த்தது.

இந்த நிலையில் காந்தாரா திரைப்படத்தின் வெற்றியை அடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் இயக்குனரும், கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டியிடம் இரண்டாம் பாகத்தை எடுக்க கூறியதை அடுத்து இயக்குனர் ரிஷப் ஷெட்டி காந்தாரா இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி வருகிறார்.

காந்தாரா
காந்தாரா

காந்தாரா இரண்டாம் பாகம் கிபி 301 முதல் 400 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது‌. மேலும் இப்படத்தில் காந்தாரா தெய்வத்தின் அறிமுகம் மற்றும் அதனுடைய பின்னணியைத் தத்ரூபமாக காட்சிப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்படத்தை பான் இந்தியா படமாக உருவாக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்க முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக 100 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து படத்தின் பணிகளை நவம்பர் 27ஆம் தேதி பூஜையுடன் தொடங்க பட குழுவில் திட்டமிட்டு இருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com