வந்தாச்சு பஞ்சுருளி.. காந்தாராவின் அடுத்த பார்ட்!

kantara
kantara

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ரிஷப் ஷெட்டி இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் அடுத்த பாகத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் தான் காந்தாரா. ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு காந்தாரா எ லெஜெண்ட்: Chapter 1 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் ரிஷப் ஷெட்டியே இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார்.

டீசரில் கையில் திரிசூலத்துடன் உடல் முழுவதும் ரத்தத்துடன் மிரட்டலாக தோன்றுகிறார் ரிஷப் ஷெட்டி.

காந்தாரா படத்தின் அந்த கனீர் குரலுக்கு அனைவரும் மெய்சிலிர்த்தனர். அதே போன்று இந்த படத்தின் டீசரிலும் அதே குரல் ஒலித்ததால் அனைவரும் படத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். கே.ஜி.எஃப். முதல் மற்றும் 2ஆம் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம்தான் காந்தாரா 2 படத்தை தயாரிக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com