#HappyBirthdayLal: ’லால் சலாம்’ லால்!

திரைப்பிரபலங்கள் வாழ்த்து!
Actor Lal
Actor Lal

தென்னிந்திய திரைப்படங்களில் தவிரக்க முடியாத, முக்கிய நடிகராக வலம் வருகிறார் லால். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் பல குரல் வித்தகர் என பன்முகத் தன்மை கொண்ட லால் அவர்களின் பிறந்தநாள் இன்று. 

மறைந்த நடிகர் கலாபவன்   மணி அவர்களுடன் இணைந்து மிமிக்ரி கலைஞராக கலைப் பயணத்தை  துவக்கிய லால் 1984ல் பாசில் அவர்களுடன் இணைந்து சில படங்கள் உதவி இயக்குநராக பணியாற்றினார். தனது பால்ய கால நண்பரான சித்திக்குடன் சேர்ந்து பல படங்கள் மலையாளத்தில் இயக்கினார். இரட்டையர்கள் இணைந்து இயக்கிய படங்களில் நகைச்சுவையே மைய்ய கருத்தாக இருந்தது.

’ஹரி ஹர் நகர்’, ’வியட் நாம் காலனி’, ’காபூலி வாலா’ போன்ற படங்கள் இந்த இரட்டை டைரக்டர்கள் தந்த முக்கிய வெற்றிப் படங்கள்.1993 ஆண்டிற்க்குப் பிறகு  பிரிந்து இருவரும் தனித் தனியே செயல்பட்டார்கள். இருப்பினும் 1993 க்கு பிறகு லால் மலையாத்தில் தயாரித்த சில படங்களை சித்திக்  இயக்கினார். சித்திக் இயக்கிய சில படங்களில் லால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். 

2013 ஆம் ஆண்டு’ ஒழி முறி’ என்ற மலையாள படத்திற்க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது லால் அவர்களுக்கு கிடைத்தது. 

தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான ’சண்டைக்கோழி’ படத்தில் லால் மாஸ் வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். 2021 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படம்  லாலை சிறந்த நடிகராக  தமிழர்களுக்கு அடையாளம் காட்டியது. வயதான காலத்தில் இளம் வயது காதலை மீட்டெடுக்கும் காட்சிகளில் ஆக சிறந்த நடிப்பை தந்திருப்பார் லால்.

2022 ஆம் ஆண்டு வெளியான டாணாக்காரன் படத்தில் போலீஸ் என்ற சிஸ்டத்தின் அடையாளமாக வாழ்ந்து காட்டியிருப்பார். இந்த 2023 ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில்  வெளியான   மாமன்னன் படத்தில் லால் நடிப்பு தமிழ் நாட்டில் இருந்த பல முதலமைச்சர்களை நம் கண்முன் கொண்டு வந்தது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் லால்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்ட லால் அவர்களின் பிறந்தநாளில் லாலுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் நடிகர் மற்றும் டாணாக்காரன் பட இயக்குநர் 'ஜெய் பீம் 'தமிழ்,''நான் காவலர் பயிற்சியின் போது நான் சந்தித்த ஒரு மோசமான காவல் பயிற்சியாளரை மனதில் வைத்துதான் டாணாக்காரன் படத்தில் லால் கேரக்டரை உருவாக்கினேன். லால் அவர்களை திரையில் பார்க்கும் போது நான் பார்த்த பயிற்சியாளரை கண் முன் கொண்டுவந்தார்.

என்னுடன் காவல் துறையில் பணி புரிந்த நண்பர்களும் இதே கருத்தை தெரிவித்தார்கள்.கேரளாவில் குளிர்ச்சியான கிளைமேட்டில் இருந்தவர் என் டாணாக்காரன் படத்திற்க்காக ஏப்ரல் மாத வேலூர் வெயிலில் மைதானத்தில் ஓடினார். டாணாக்காரன் படத்தின் வெற்றியில் லால் சாரின் பங்களிப்பு முக்கியமானது".                                                         

அதேபோல், நடிகர் மற்றும் நாட்டின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நட்டி என்ற நட்ராஜ் கூறுகையில், "லால் அவர்களுடன் கர்ணன் மற்றும் காட்பாதர் படங்களில் இணைந்து நடித்திருக்கிறேன். கர்ணன் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் நடந்தது. லால் பெரிய நடிகர். விரும்பினால் கேரவனில்  போய் ஓய்வெடுக்கலாம்.

ஆனால் லால் அங்கே உள்ள கிராம மக்களிடம் ஓய்வு நேரத்தில் போய் பேசுவார். மக்களின் உடல் மொழியை கூர்ந்து கவனிப்பார். இதை தன் படத்தில் பயன் படுத்திகொள்வார்.

இதை ஒவ்வொரு நடிகரும்  பின்பற்ற வேண்டும். தூத்துக்குடி மண்ணின் கருமை நிறம் வேண்டும் என்பதற்க்காக வெயிலில் பல மணி நேரம் நிற்பார் லால். லால் அவர்களுடன் இணைந்து நடித்ததை பெருமையாக நினைக்கிறேன்" 

தமிழ்க்குடிமகன் இயக்குநர் இசக்கி கார் வண்ணன் " என் தமிழ்க்குடிமகன் படத்தின் ஹீரோ சேரன். ஆனால் ஹீரோவாக நினைப்பது இப்படத்தில் வில்லனாக நடித்த லால் அவர்களைத்தான். தனக்கு பிடித்த விஷயத்தை மனதார பாராட்டுவார்.

படப்பிடிப்பின்போது ஒருமுறை லால் சார்,”நான் பல படங்களை இயக்கி இருக்கிறேன். ஆனால் ஜாதிக்கும், பரம்பரை வேலைக்கும் இருக்கும் உறவை சொல்லும்  தமிழ்க்குடிமகன் படத்தை போன்று எடுக்க முயற்சித்தேன். முடியவில்லை.இப்போது உங்கள் படத்தில் நடிப்பதன்  மூலம் இது நிறைவேறி விட்டது” என்றார் லால்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com