கற்பனை கேரக்டரில் காதல் பல்லவி!

கற்பனை கேரக்டரில் காதல் பல்லவி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
– ராகவ் குமார்.

பிரேமம் படத்தில் நடித்த சாய் பல்லவியை தமிழ், மலையாள ரசிகர்கள் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க மாட்டார்கள் பிரேமம் படத்திற்கு பிறகு தமிழில்  சில படங்கள் நடித்தாலும் அம்மணியின் திறமையை பார்த்து அணைத்து கொண்டவர்கள் அக்கட தேசத்து காரர்கள்தான்.

தற்சமயம் தெலுங்கில் ''ஷ்யாம் சிங்கா ராய்'' என்ற படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். ''நான் ஈ'' படத்தில் நடித்த நானி ஹீரோவாக நடிக்கிறார்.இப்படம் தெலுங்கு, தமிழ் உட்பட ஐந்து மொ ழிகளில் வெளியாகிறது.

சுதந்திர போராட்ட கால கட்டத்தில் சிங்கா ராய் என்ற கதாபாத்திரதை வைத்து கற்பனையாக உருவான இப்படத்தில் சாய் பல்லவி சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தேவதாசி கேரக்டரில் நடித்திருக்கிறார்.திருமணம் செய்து கொள்ளாமல் வாழ நிர்பந்திக்கப்படும் தேவதாசிக்கு காதல் மலர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை மிக உணர்வுடன் நடித்திருக்கிறார் சாய் பல்லவி.இதற்காக தேவதாசிகளை பற்றி ஆராய்ச்சி செய்து இருக்கிறார் பல்லவி. அதாவது அவர்களின் நடை உடை பாவனை போன்றவைகளை புத்தகங்களில் படித்தும், சிலரிடம் கேட்டு தெரிந்து கொண்டு நடித்து உள்ளார்.

நம்ம ஊர் பொண்ணு நல்லா வந்தா நமக்கும் பெருமை தானே.இந்த படம் pan இந்தியா படம் என்று சொல்கிறார்கள். அதாவது இந்தியா முழுமைக்குமாக எடுக்கப்பட்ட படம். அதில் நம்ம மலர் டீச்சர் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பது, அவர் ரசிகர்களுக்கு செம மகிழ்ச்சி!

logo
Kalki Online
kalkionline.com