கார்த்தி அரவிந்த் சாமி நடிக்கும் புதிய படம்!

கார்த்தி அரவிந்த் சாமி நடிக்கும் புதிய படம்!

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் கார்த்தி. இந்நிலையில், கார்த்தி நடிகர் அரவிந்த் சாமி இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'பருத்திவீரன்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியைப் பெற்றவர் நடிகர் கார்த்தி. அதன்பின் அவர் போலீஸ் கதாபாத்திரம், கிராமத்து கதாபாத்திரம், வரலாற்றுக் நாயகன் என அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அது மக்களால் கவரப்பட்டு வருகிறது.

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 2'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் தற்போது 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்திய படங்களான 'சுல்தான்', 'விருமன்', 'சர்தார்', 'பொன்னியின் செல்வன்' என அனைத்துமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துவரும் நிலையில், 'ஜப்பான்' படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நடிகர் கார்த்தியின் அடுத்த படமான ( karthi 27 ) ' கார்த்தி 27 ' ல் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தியும், அரவிந்த் சாமியும் இதற்குமுன்னர் இணைந்து நடித்ததில்லை. அதுவும் அரவிந்த் சாமி 1999க்கு பின், 2013 முதல் 'கடல்', 'தனி ஒருவன்', 'போகன்', 'கஸ்டடி' என மீண்டும் ஒரு ரவுண்ட் வருகிறார். அதிலும், 'தனி ஒருவன்', 'போகன்' படங்களில் வில்லனாக அருமையாக நடித்திருப்பார். அதனால் இந்த கூட்டணி அமைந்தால், படம் வேறுவிதமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இப்படத்தை '96' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்க உள்ளதாகவும், சூர்யாவின் 2டி நிறுவனம்தான் இதை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com