
சர்தார் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் பி எஸ் மிதரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தியாவின் உளவுத்துறை அதிகாரியாக வரும் கார்த்தி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பாக அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை பற்றிய கதைக்களத்தை கொண்டு உருவான சர்தார் விமர்சன ரீதியான வரவேற்பை மட்டுமல்லாது நல்ல வசூலையும் பெற்று இருந்தது.
இந்த படத்தில் ராஹி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனீஸ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் படத்தினுடைய முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் சர்தார் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். சர்தார் ஒன்றைப் போலவே சர்தார் இரண்டும் ஆக்சன் திரில்லர் படமாகவே உருவாக உள்ளது.
ராஜமுருகன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் திரைக்கு வர இருக்கும் ஜப்பான் திரைப்படம் கார்த்தி ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நிலையில், தற்போது மித்ரன் இயக்கத்தின் நடிகர் கார்த்தி மீண்டும் நடிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருப்பது நடிகர் கார்த்தி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயம் இயக்குனர் மித்ரன் விஷாலைக் கொண்டு இயக்கிய இரும்புத்திரை, சிவகார்த்திகேயனை கொண்டு இயக்கிய ஹீரோ, கார்த்தியை கொண்டு இயக்கிய சர்தார் ஆகிய பாடங்கள் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதைத் தொடர்ந்து உருவாக உள்ள சர்தார் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறது.