’கருப்பர் நகரம்’ டைட்டிலுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது:கோபி நயினார்!

கருப்பர் நகரம்
கருப்பர் நகரம்
Published on

யன்தாரா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு ’அறம்’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் கோபி நயினார். இவர் தற்போது ’கருப்பர் நகரம்’ எனும் படத்தை இயக்குகிறார். இந்நிலையில் படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது.

கருப்பர் நகரம் படத்தின்  கதை எழுத்தாளர் கரன் கார்க்கி எழுதிய  கருப்பர் நகரம் என்ற நாவலை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்டதா என்ற  கேள்வி எழ, படத்தின் இயக்குனர் கோபி நயினாரை நமது கல்கி ஆன்லைன் சார்பாக தொடர்பு கொண்டோம்.

இயக்குநர் கோபி நயினார்
இயக்குநர் கோபி நயினார்

" கருப்பர் நகரம் என்ற நாவல் வருவதற்கு முன்பே நான் இப்போது இயக்கும் கருப்பர் நகரத்தின் பட கதையை உருவாக்கிவிட்டேன். கல்லூரி படத்தில் நடித்த அகிலை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடத்தினேன் பல்வேறு காரணங்களால் படபிடிப்பை தொடர முடியவில்லை. இப்போது மீண்டும் ஜெய்யை வைத்து இயக்குகிறேன்.

கறுப்பர் நகரம் புத்தகம்
கறுப்பர் நகரம் புத்தகம்

மேலும் கருப்பர் நகரம் என்ற தலைப்புக்கு ஒருவர் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. பிளாக் சிட்டி, ஒயிட் சிட்டி என்று ஆங்கிலேயர்கள் அன்றைய சென்னையை அழைத்தார்கள். நாவலுக்கும் நான் எடுக்கும் கருப்பர் நகரம்’ படத்திற்க்கும் தொடர்பில்லை என்கிறார் கோபி.

அறம் படத்தில் அரசு இயந்திரத்தின் மெத்தனத்தை சொன்னவர், கருப்பர் நகரத்தில் ஒ ரு மாறுபட்ட களத்தை சொல்வார் என நம்புவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com