நமது முன்னோர்கள் பயன்படுத்திய வீடு, வீட்டில் உள்ள பொருட்கள் மீது நமக்கு ஒரு செண்டிமெண்ட் டச் இருக்கும். இந்த உணர்வின் அடிப்படையில் 'கட்டில்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் கணேஷ் பாபு.
இந்த படத்திற்கு கதை திரைக்கத்தை வசனம் எழுதி எடிட் செய்துள்ளார் பிரபல எடிட்டர் லெனின்.எப்போதும் ஆர்ப்பாட்டமாக இசை அமைக்கும் ஸ்ரீ காந்த் தேவா கர்நாடக இசை பின்னணியில் அழகாக இசை அமைத்துள்ளார். வைரமுத்துவின் வரிகளுக்கு சிட் ஸ்ரீராம் பாடி உள்ளார்.
இந்த அனைத்தையும் விட கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய கணேஷ் பாபு "இந்த படம் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தை பார்த்த ஒரு குடும்பத்தினர் தங்களது பூர்வீக வீட்டை விற்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டனர். நீங்கள் பார்த்தாலும் உங்களின் மரபின் வேர்களை தேடி செல்வீர்கள் என்பது மட்டும் உறுதி" என்கிறார். 'கட்டில்' படத்தின் விழாவில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கலந்து கொண்டு குழுவை வாழ்த்தினார்.