ஹாட் ஸ்டாருடன் இணையும் கவிதாலயா!

ஹாட் ஸ்டாருடன் இணையும் கவிதாலயா!

இன்று பாலசந்தர் உயிருடன் இருந்திருந்தால் எந்த ஊடகத்தில் படம் தயாரித்து இயக்கி இருப்பார். கண்டிப்பாக ஓ டி டி தளத்தில்தான் இயக்கி இருப்பார்.                         

நாடகத் துறையில் தன் கலைப்பயணத்தை ஆரம்பித்து சினிமாவுக்குள் நுழைந்து கவிதாலயா நிறுவனத்தை துவங்கினார்.இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு சிறந்த படைப்புகளை தயாரித்து இயக்கினார். தூர்தர்சன் ஆரம்பித்த பின்பு பல்வேறு தொடர்களை சின்னதிரையிலும்  கால் பதித்தார்.

சென்னை தூர்தர்சனுக்காக இவர் இயக்கிய ரயில் சிநேகம் மிக முக்கியமானது. தனியார் தொலைக்காட்சிகள் வந்த பின்பு தொடர்களுக்காக மின் பிம்பம் நிறுவனம்  துவக்கி பல்வேறு இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் வழங்கினார்.     

தற்போது கவிதாலயா நிறுவனம் பிரபல ஓ  டி டி நிறுவனமான   ஹாட் ஸ்டாருடன் இணைந்து புதிய பெயரிடப்படாத  படம் ஒன்றை தயாரிக்கிறது.கவிதாலயா நிறுவனம் சார்பாக புஷ்பா கந்தசாமி, பரதன் கந்தசாமியும் தயாரிக்கிறார்கள். உதய் மகேஷ் இந்த படத்தை இயக்குகிறார். பாலசந்தர் இயக்கிய சாந்தி நிலையம் தொடரின் கதை வசனம் இவருடைய துதான்.   

ஜி. வி. பிரகாஷ் -அனஸ்வர ராஜன் ஹீரோ ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்களுடன் தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன் போன்றவர்களும் நடிக்கிறார்கள்.    மறைந்தாலும் நம் மனதில் வாழும் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் நிறுவன படைப்பு வெற்றி பெற வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com