வாடகைத் தாயாக 'கயல்' ஆனந்தி!

கதிர் - ஆனந்தி
கதிர் - ஆனந்தி

ஆனந்தி தற்சமயம் யூகி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஜாக் ஹரிஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். பொது வெளியிலும், சினிமாவிலும் தற்சமயம் அதிகம் பேசப்படும் வாடகைத்தாய் விஷயம் தான் படத்தின் மைய கருவாக உள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியிட்டு விழாவில் பேசிய ஆனந்தி, "இந்த படம் வாடகைத் தாய் பிரச்சனை பற்றி பேசுகிறது. இந்த படத்தில் நடிக்கும் போது நான் நிஜமாகவே கர்ப்பமாக இருந்தேன். அதனால் இன்னமும் எமோஷனல் டச்சுடன் இந்த படத்தில் நடிக்க முடிந்தது. நடிக்க வந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த படம் எனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும்" என்றார்.

இந்த படத்தில் ஆனந்தி மட்டுமில்லாமல் பவித்ர லக்ஷ்மி, ஆத்மிகா என இரு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். கதிர், கதாநாயகனாக நடிக்கும் யூகி படத்தில் நட்டி (நடராஜ் ) சித்திரம் பேசுதடி நரேனும் நடித்துள்ளார்கள்.

கதிர் - ஆனந்தி
கதிர் - ஆனந்தி

இந்த படத்தின் இயக்குனர் ஜாக் பேசும் போது இது தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் இரு மொழிப்படம். சமீபத்தில் வெளியான யசோதா படத்தில் சொல்லப்பட்டுள்ள வாடகைத் தாய் கதைக்கும் எங்கள் யூகி படத்தில் நாங்கள் சொல்லியுள்ள வாடகைத் தாய் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இது சஸ்பென்ஸ் எமோஷனல் இணைந்த கதை என்றார். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி திலகவதி ஐ பி.எஸ். அவர்களின் மகன் டாக்டர் பிரபு திலக், யூகி படத்தை தமிழ் நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com