கன்னட மொழியில் நடிக்கவுள்ள பிரபல பாலிவுட் நடிகை யார் தெரியுமா? ட்ரெண்டிங்கில் #ToxicThemovie!

#ToxicTheMovie
#ToxicTheMovie
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

யாஷ் நடிப்பில் 2025ம் ஆண்டு வெளியாக இருக்கும் டாக்சிக் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனையடுத்து ToxicThemovie என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேஜிஎஃப் பாகம் 1 மற்றும் 2 இந்திய அளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. கேஜிஎஃப் பாகம் 1 படத்தின் மூலம் யாஷ் இந்திய மக்களின் மனதில் அறிமுகமாகி, அதே படத்தின் மூலம் நிலையான இடத்தையும் பிடித்துக்கொண்டார்.

யாஷின் அடுத்தப் படம் குறித்த அப்டேட் டிசம்பர் 8ம் தேதி வெளியானது. யாஷ் தனது வலைதளப் பக்கத்தில் படத்தைப் பற்றிய ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதன்மூலம் படத்தின் பெயர் ‘டாக்சிக்’ என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தை தேசிய விருது வாங்கிய கீது மோகன்தாஸ் இயக்கவுள்ளார்.

‘டாக்சிக்’ படத்தை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் எனத் தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படத்திற்கான முன்னேற்பாடுகளை செய்ய யாஷ் செப்டம்பர் மாதம் லண்டன் சென்றதாக சினிமா வட்டாரத்தினர் கூறினார்கள்.

படக்குழு வெளியிட்ட அந்த வீடியோவில் ஒரு மனிதர் தொப்பி, துப்பாக்கி மற்றும் சிகரெட் வைத்துக்கொண்டு இருந்த ஒரு புகைப்படமும் இருந்தது. இதன்மூலம் இது ஒரு ஆக்ஷன் படம் என்பது நிரூபனமானது. மேலும் இது ஒரு போதைப் பொருள் கடத்தல் சம்பதப்பட்ட படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் இயக்குனர் கீது மோகன்தாஸ் 1986ம் ஆண்டு வெளியான ‘ஒண்ணு முதல் பூஜ்ஜியம்’ வரை என்ற தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும் நள தமயந்தி, ‘பொம்மக்குட்டி அம்மாவுக்கு’ ,’ பொய்’ போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். இறுதியாக 2009ம் ஆண்டு கீது ‘நம்மாள் தமிழ்’ என்ற படத்தில்தான் கதாநாயகியாக நடித்தார். அதன்பின்னர் நடிப்பை விட்டு படம் இயக்குவதில் ஆர்வம் காட்டினார்.

மேலும் 2014ம் ஆண்டு முதன்முதலாக ‘பொய்யர் கடை’ என்ற ஹிந்தி படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றார். பிறகு 2019ம் ஆண்டு ‘மூத்தோன்’ என்ற மலையாள ஹிந்தி படத்தை இயக்கினார். இப்படமும் கதைக்காக க்ளோபல் ஃப்லிம் மேக்கிங் விருது வாங்கியது. யாஷுடன் கைக்கோர்த்த இந்த படம் அவரின மூன்றாவது படமாகும். இந்நிலையில் ‘டாக்சிக்’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

kareena kapoor
kareena kapoor

மேலும் காஃபி வித் கரண் என்ற ஹிந்தி நிகழ்ச்சியில் கரீனா கப்பூர் ‘தான் ஒரு கேஜிஎஃப் பெண்’ என்று கூறினார். மேலும் தென்னிந்திய நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராம் சரண், விஜய் தேவரகோண்டா, பிரபாஸ் ஆகியோரில் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கரண் கேட்டதற்கு யாஷுடன் இணைந்து நடிக்க ஆசைவுள்ளதாக கரீனா கூறினார்.

ஒருவேளை டாக்சிக் படத்தில் கரீனா நடிப்பது உண்மையோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com