நயன்தாரா நடிப்பில் விரைவில் கோலமாவு கோகிலா 2 பாகம்!

Nayanthra, Anirudh, Director Nelson
Nayanthra, Anirudh, Director Nelson

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலாவின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் முடிவுச் செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் பல திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றிருக்கிறார். தற்போது ஜவான் திரைப்படத்தின் மூலமாக இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திரமாகவும் மாறி இருக்கிறார். இயக்குனர் நெல்சன் நடிகை நயன்தாராவை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை கடந்த 2018ம் ஆண்டு இயக்கினார்.

இத்திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. முதல் படமே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதால் நெல்சன் தமிழ் திரை உலகில் அறியப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறினார். அதன் பிறகு சிவகார்த்திகேயனை கொண்டு டாக்டர் திரைப்படத்தை இயக்கினார். அதன் பிறகு வெளியான பீஸ்ட், ஜெயிலர் திரைப்படங்களை இயக்கினார் நெல்சன். இது இவரை புகழின் உச்சிக்கே அழைத்து சென்றிருக்கிறது.

மேலும் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் இந்தியா முழுவதும் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் மீண்டும் நடிகை நயன்தாராவை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இப்படம் கோலமாவு கோகிலா இரண்டாம் பாகம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோலமாவு கோகிலா படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கோலமாவு கோகிலா இரண்டாம் பாகம் எடுக்க படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நயன்தாரா தற்போது வேறு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படத்தை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com