கூச முனிசாமி வீரப்பன்
கூச முனிசாமி வீரப்பன்

விமர்சனம்:கூச முனிசாமி வீரப்பன்!

கூச முனிசாமி வீரப்பன் : இது கதையல்ல,கண்ணீர்    (3.5 / 5)

இன்றும் தமிழக, கர்நாடக மக்களால் மறக்க முடியாத பெயர் சந்தனக்கடத்தல் வீரப்பன். சந்தன கடத்தல் வீரப்பனை பற்றி முதல் முதலில் வெளி உலகிற்க்கு அடையாளம் காட்டிய பெருமை நக்கீரன் கோபால் அவர்களை சேரும். கோபால் அவர்கள் 1993-96 ஆண்டு கால கட்டங்களில் செய்திகள் மற்றும் தொலைக்காட்சி வீடியோக்கள் மூலமாக வீரப்பன் பற்றி  பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பற்றி மக்களிடம் தெரிவித்தார்.

வீரப்பன் கொல்லப்பட்டு 19 ஆண்டுகளுக்கு  பிறகு தற்போது  சரத் ஜோதி என்பவர் நக்கீரன் கோபால் அவர்களிடம் இருந்த வீரப்பன் பற்றிவெளியிடப்படாத  வீடியோக்களை சேகரித்து, "கூச முனிசாமி வீரப்பன் ' என்ற ஆவணப்படத்தை ஜீ 5 ஒரிஜினல் OTT தளத்தில் இயக்கி உள்ளார் டைட் டிலுக்கு பக்கத்தில் Unseen veerappan tapes (நாம் பார்க்காத வீரப்பன் காணொளிகள்)  என்று குறிப்பிட்டபட்டுள்ளது.

மொத்தம்  ஆறு  எபிசோட்கள் உள்ள இந்த தொடரில் பெரும்பான்மையான இடங்களில் வீரப்பன் பேசுகிறார். அதிரடிப்படைக்கும் தனக்கும் ஏற்றப்பட்ட மோதல்கள், காட்டி கொடுத்த துரோகிகளை தண்டனை தந்த விதம் இப்படி பல நாம் அம்சங்களை ஒப்புதல் வாக்கு மூலம் போல தந்துள்ளார் வீரப்பன். காவல் துறை அதிகாரி கோபால கிருஷ்ணன் என்பவர் ஆயிரம் ஆடுகள் வரை திருடியதாக சத்தியம் செய்கிறார் வீரப்பன். அடுத்த காட்சியில் ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும் நபர் இதை உறுதி படுத்துகிறார்.

இப்படி வீரப்பன் சொல்லும் பல்வேறு விஷயங்களை சாட்சிகள் மூலமும் ஆவணப்படுத்துகிறார்.                                    நான்காவது எபிசோட்  வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கர்நாடக -தமிழக கூட்டு அதிரடிப்படையினர் அப்பப்பகுதி மக்களை பாலியல் வன்புணர்வு செய்தது, நிர்வாணப் படுத்தி  சித்ரவதைக்குள்ளாக்கியது, மின்சார ஷாக் வைத்தது  இன்னும் சொல்ல முடியாத பல கொடுமைகளை பாதிக்கப்பட்ட மக்களே பேசுகிறார்கள். துளி கண்ணீர் இல்லாமல் எந்த வித உணர்வுவும் இல்லாமல் பேசுகிறார்கள்.

அதிரடிப் படை செய்த சித்ரவதைகளால் உணர்வுகள் மரத்து போய் விட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது.  ஆனால் பார்வையாளர்களுக்கு கண்ணீர் வருவதை தவிர்க்க முடியாது ஒர்க் ஷாப் என்ற பெயரில் சித்ரவதை கூடங்களை சொல்லும் போது நமக்கு பயம் வருகிறது.             வீர்ப்பன் தேடுதல்  வேட்டையில் நடந்த மோசமான மனித உரிமைகள் 1991-96 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்தன. இந்த ஆவணப்படத்தில் ஜெயலலிதாவின் பெயர் இடம் பெறுகிறது.

ஆனால் இந்த கால கட்டத்தில் அதிரடிப்படைக்கு தலைமை தாங்கிய வால்டர் தேவாரம் பெயர் வரும் போது மியூட் போடுகிறார். முன்னால் அமைச்சர் ஒருவரின் பெயர் வரும் போதும் இதே நிலைமை தான். நடந்த மனித உரிமை மீறல்களில் தேவாரத்தின் பங்கு உள்ளது என்பதை நக்கீரன் கோபால் குறிப்பிட்டுள்ளார். இந்த இரு பெயர்கள் ஆவண படத்தில் இடம் பெறாதது ஏனோ?                                     

நீதிபதி சாதாசிவம், நீதியரசர் கிருஷ்ணஐயர் போன்றவர்கள் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்கு வேண்டும் என்று சொல்லியிறுகிறார்கள். ஆனால் நியாயம் இம்மக்களுக்கு கிடைக்க வில்லை. கூச முனிசாமி வீரப்பன் சீசன் 2 வரும் என லீட் தருகிறார்கள். அப்போதாவது இம்மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்கட்டும். கூச முனிசாமி வீரப்பன் -ஒரு இனத்தின் கண்ணீர்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com